கே. பாலச்சந்தர் தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று போற்றப்படுபவர். ஒரு டிரெண்ட் செட்டர் இயக்குனராக வலம் வந்த பாலச்சந்தர் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதையமைப்பதில் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் கவிதாலயா புரொடக்சன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்தார்.
இந்த நிலையில் தனது கவிதாலயா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் வெற்றியை குறித்து தவறாக எடை போட்டிருக்கிறார் பாலச்சந்தர். அத்திரைப்படத்தை குறித்தும் அச்சம்பவம் குறித்தும் இப்போது விரிவாக பார்க்கலாம்.
1982 ஆம் ஆண்டு கவிதாலயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், எஸ்.வி.சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மணல் கயிறு”. இத்திரைப்படத்தை விசு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் விசுவின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு முன்பு விசுவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்த பாலச்சந்தர், தனது இணை தயாரிப்பாளரான பிரமிட் நடராஜனிடம் கலந்துரையாடினார். பிரமிட் நடராஜனும் விசுவும் மிகச் சிறந்த நண்பர்கள்.
விசு “மோடி மஸ்தான்” என்ற நகைச்சுவை நாடகத்தை எழுதி அரங்கேற்றியிருந்தார். அந்த நாடகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. ஆதலால் அந்த நாடகத்தையே படமாக்கலாம் என விசுவும் பிரமிட் நடராஜனும் கூறியிருக்கின்றனர். அதற்கு பாலச்சந்தர், “எதாவது சீரீயஸான படமா எடுத்து முன்னேற பாரு. அது முழுக்க முழுக்க காமெடி நாடகம். அந்த நாடகத்துக்கு வரவேற்பு கிடைச்சதுங்குறதுக்காக அதை படமாக எடுத்தால் அதே வரவேற்பு அப்படத்திற்கும் கிடைக்கும் என சொல்லமுடியாது” என்று கூறியிருக்கிறார். ஆனால் பிரமிட் நடராஜனும் விசுவும் பாலச்சந்தரிடம் ஒற்றை காலில் நின்று அவரை ஒப்புக்கொள்ள வைத்தனர். ஆனால் பாலச்சந்தருக்கோ அத்திரைப்படத்தின் மீது நம்பிக்கை இல்லை.
இதனை தொடர்ந்து “மோடி மஸ்தான்” நாடகம், “மணல் கயிறு” திரைப்படமாக உருவாகி வெளியானது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இத்திரைப்படத்தின் 100 ஆவது நாள் வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பாலச்சந்தர், “எனக்கு இந்த படம் இப்பவும் சுத்தமா பிடிக்கலை. ஆனா படம் ஓடிருச்சுங்குறதுனாலதான் இங்க வந்தேன்” என கூறினாராம். பாலச்சந்தருக்கு அத்திரைப்படத்தை உருவாக்க எந்த வித விருப்பமும் இல்லை என்றாலும் விசுவுக்காகவும் பிரமிட் நடராஜனுக்காகவும் அத்திரைப்படத்தை தயாரிக்க சம்மதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உன் வாய்ஸ் ஆம்பள மாதிரி இருக்கு!. நடிகையை நிராகரித்த இயக்குனர்கள் – வாய்ப்பு கொடுத்த பாலச்சந்தர்…!
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…