More
Categories: Cinema News latest news

ஒரு சூப்பர் ஸ்டாரை இப்படி திட்டிட்டோமே.. “என்ன இருந்தாலும் அப்படி பண்ணிருக்க கூடாது”… ஃபீலிங்ஸ் ஆன பாலச்சந்தர்…

1977 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சுஜாதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அவர்கள்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் ஒரு குழந்தையை கொஞ்சுவது போன்ற ஒரு காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் பாலச்சந்தர் எதிர்பார்த்தது போல் ரஜினிகாந்த் நடிக்கவில்லையாம்.

பல டேக்குகள் சென்றும் ரஜினிகாந்த்தின் நடிப்பு பாலச்சந்தருக்கு திருப்தியாக இல்லையாம். உடனே கோபத்தில் ரஜினிகாந்த்தை கண்டபடி திட்டினாராம் பாலச்சந்தர். “இவனுக்கு நடிப்பே வராது, பேசாம ஜெய்கணேஷை கூப்பிட்டு வாங்க” என கூறி வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டாராம் பாலச்சந்தர்.

Advertising
Advertising

K Balachander and Rajinikanth

இந்த நிலையில் ஒரு சினிமா விழாவில் ரஜினிகாந்த்திடம் பாலச்சந்தர் பல கேள்விகள் கேட்பது போல் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது பாலச்சந்தர் “நான் டைரக்ட் பண்ணும்போது இவர் கிட்ட இப்படி மாட்டிக்கிட்டோமே என நினைச்சது உண்டா?” என நகைச்சுவையாக கேட்டார்,

அதற்கு ரஜினிகாந்த் “நிறையா வாட்டி நினைச்சிருக்கேன்” என கூற அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது. அதன் பின் “அவர்கள் படத்தின்போது நான் உன்னை திட்டினேனே. அது ஞாபகம் இருக்கா உனக்கு?” என கேட்க, அதற்கு ரஜினிகாந்த் “எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என கூறினார்.

இதையும் படிங்க: வலைப்பேச்சுவை கண்டபடி கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி?? இப்படி கோபப்படுற அளவுக்கு என்னப்பா ஆச்சு??

K Balachander and Rajinikanth

அதன் பின் பேசிய பாலச்சந்தர் “அன்னைக்கு நான் ரொம்ப கன்னாபின்னான்னு திட்டிட்டேன். அதன் பின் எத்தனையோ நாள் நான் அதை நினைச்சி வருத்தப்பட்டிருக்கேன். அதுவும் நீ பெரிய நட்சத்திர நடிகராக வளர வளர எப்போதும் எனக்கு அதுதான் ஞாபகம் வரும். இப்படி ஒரு பெரிய நட்சத்திரத்தை கன்னபின்னான்னு திட்டிட்டியேடா என்று என்னை நானே திட்டிக்குவேன்” என மிகவும் பெருந்தன்மையோடு கூறியது அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Published by
Arun Prasad

Recent Posts