இனிமே கவர்ச்சியா நடிச்சா அவ்வளவுதான்! -  நடிகைக்கு வார்னிங் கொடுத்த பாலச்சந்தர்!..

by Rajkumar |   ( Updated:2023-05-01 03:03:56  )
இனிமே கவர்ச்சியா நடிச்சா அவ்வளவுதான்! -  நடிகைக்கு வார்னிங் கொடுத்த பாலச்சந்தர்!..
X

சினிமாவை பொறுத்தவரை இங்கு கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. தமிழில் உள்ள முக்கால்வாசி கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்கக்கூடியவர்களே..

நடிகை த்ரிஷா கூட இதுக்குறித்து ஒரு பேட்டியில் கூறும்போது நடிகைகள் என்றாலே கண்டிப்பாக கவர்ச்சியாக நடிக்க வேண்டியுள்ளது என தெரிவித்திருந்தார். ஆனால் சில நடிகைகள் விதி விலக்காக இறுதி வரை கவர்ச்சியாகவே நடிக்காமல் சினிமாவில் இருந்துள்ளனர்.

அப்படி இருந்த நடிகைகளில் சீதா முக்கியமானவர். தமிழில் ஆண்பாவம் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை சீதா. பாவடை தாவணியில் கிராமத்து பெண்ணாக அந்த படத்தில் அறிமுகமானார். அந்த படம் வந்த உடனேயே பலரின் உள்ளம் கவர்ந்த கதாநாயகியாக மாறிவிட்டார் சீதா.

கவர்ச்சியால் வந்த பிரச்சனை:

பிறகு அந்த படத்தை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார் சீதா. அதில் முக்கியமான திரைப்படம் குரு சிஷ்யன். குரு சிஷ்யன் திரைப்படத்தில் ரஜினி மற்றும் பிரபு இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். அதில் பிரபுவிற்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார்.

அதற்கு முன்பு வரை கவர்ச்சியாக நடிக்காத சீதா இந்த படத்தில் மாடர்ன் லுக்கில் நடித்திருந்தார். இதனால் பலருக்கும் சீதாவா இது? என அடையாளமே தெரியாமல் போய்விட்டது. அதனை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தருக்கு இந்த செய்தி சென்றுள்ளது.

இதனை கேள்விப்பட்டதும் பாலச்சந்தர் மிகவும் கோபமாகிவிட்டார். உடனே சீதாவிற்கு போன் செய்த பாலச்சந்தர் இந்த மாதிரி கவர்ச்சியா எல்லாம் ஏன்மா நடிக்கிற? இப்படி நடிக்கிறது சரி கிடையாது. அதற்கு பிறகு சினிமாவில் உனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்காது? எனவே இனிமேல் இப்படி நடிக்க கூடாது என வார்னிங் கொடுத்துள்ளார்.

அதற்கு பிறகு சீதா எந்த படத்திலேயும் அந்த மாதிரி நடிக்கவில்லை என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கனகா வசிக்கும் வீட்டில் என்னதான் நடக்கிறது?!.. உதவியாளர் சொன்ன அதிர்ச்சி செய்தி….

Next Story