ரஜினி - கமல் ரெண்டு பேரும் இல்ல!. எனக்கு பிடித்த நடிகர் அவர்தான்!. பாலச்சந்தர் சொன்னதை பாருங்க!..

நாடகங்களை இயக்கி வந்த பாலச்சந்தர் ஒரு கட்டத்தில் சினிமாவில் நுழைந்தார். நாடகங்களை இயக்கி வந்ததால் துவக்கத்தில் இவரின் பல படங்கள் நாடகங்கள் போலவே இருந்தது. ஒருகட்டத்தில் புதுமையான முயற்சிகளை செய்யும் இயக்குனராக மாறினார். குறிப்பாக பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்க துவங்கினார்.

அப்படி வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், தப்புத்தாளங்கள், சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் சினிமா கதாநாயகர்களை சுற்றியே சுழன்ற போது கதாநாயகிகளை வைத்து படங்களை உருவாக்கி அசத்தினார் இவர்.

இதையும் படிங்க: நல்ல பேரே கிடைக்கலையா? கவின் படங்களில் தொடரும் சேட்டை.. ஒரு படம் கூட மிஸ் ஆகலை!…

தமிழ் சினிமாவில் 100 படங்களை இயக்கிய சில இயக்குனர்களில் பாலச்சந்தரும் ஒருவர். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கு உண்டு. கமல்ஹாசன் சிறு வயது முதலே சில படங்கள் நடித்திருந்தாலும், வாலிப வயதில் அவரை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் பதிய வைத்தவர் பாலச்சந்தர்தான்.

அதேபோல், சூப்பர்ஸ்டார் ரஜினியை தனது அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, ரஜினிக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து அவரை விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து மெருகேற்றியவர் பாலச்சந்தர்தான். அதனால், அவர் மீது எப்போதும் குருபக்தியை கொண்டிருந்தார் ரஜினி.

இதையும் படிங்க: என்னங்க.. பொசுக்குனு இப்படி இறங்கிட்டீங்க… சூப்பர்ஸ்டாருக்கு தங்கையாகும் நயன்தாரா…

அதேநேரம் ‘நீங்கள் அறிமுகம் செய்து வைத்த நடிகர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?’ என ஒருமுறை பத்திரிக்கையாளர் கேட்ட போது பாலசச்ந்தர் சொன்ன பதிலில் ரஜினியோ, கமலோ இல்லை. அவர் சொன்னது வேறு ஒரு நடிகரை. நான் இயக்கிய நிழல் நிஜமாகிறது படத்தில் காசி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க பலரையும் பார்த்தேன். ஆனால், யாரும் செட் ஆகவில்லை. அப்போதுதான் அனுமந்தை கண்டுபிடித்தேன்.

hanumanth

அந்த படத்தில் காசி என்கிற வேடத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். நான் அறிமுகம் செய்ததிலேயே எனக்கு பிடித்த நடிகர்’ என பாலச்சந்தர் சொல்லி இருந்தார். நிழல் நிஜமாகிறது படம் 1978ம் வருடம் வெளியானது. இந்த படத்தில்தான் சரத்பாபுவும் அறிமுகமானார். முக்கிய வேடத்தில் சோபா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.

 

Related Articles

Next Story