நாடகங்களில் நடித்து அப்படியே சினிமாவுக்கு வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி. நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர். புதிதாக யார் நடிக்க வந்தாலும் அவர்களுக்கு காட் ஃபாதராக இருக்கும் நடிகர். அவரின் பாதிப்பு இல்லாமல் எந்த நடிகரையும் பார்க்க முடியாது என்கிற அளவுக்கு நடிப்பில் பல பரிமாணங்களை காட்டியவர். இவர் ஏற்காத வேடமே இல்லை என சொல்லுமளவுக்கு பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் சிவாஜி. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செண்டிமெண்ட் கதைகளில் அதிகம் நடித்தவர். சாமானியன் முதல் கடவுள் அவதாரம் வரை நடிப்பில் பல பரிமாணங்களை காட்டி பிரமிக்க வைத்தவர்.
சிவாஜி 13 நாட்கள் மட்டும் நடித்து ஒரு படம் வெளியாகி வசூலில் சக்கை போட்டு போட்ட சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். அதுவும் அந்த படத்தில் 3 வேடங்களில் நடிப்பில் வெரைட்டி காட்டி நடித்தார். அந்த திரைப்படம்தான் பலே பாண்டியா. இந்த திரைப்படம் 1962ம் வருடம் மே மாதம் 26ம் தேதி வெளியானது. அதாவது, அந்த படம் வெளியாகி 61 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தேவிகா நடித்திருப்பார். எம்.ஆர்.ராதாவும் இரு வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இப்படத்தை பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கியிருந்தார். மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – இராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தது.
நடிகர் ரஜினி…
சுதா கொங்கரா…
இயக்குனர் விக்ரமனிடம்…
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…