பாலு மகேந்திராவின் கடைசி திரைப்படம்… மூட்டு வலியிலும் இப்படி கஷ்டப்பட்டிருக்காரே!!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராகவும் மிகவும் தனித்துவமான பாணியை கையாளும் இயக்குனராகவும் திகழ்ந்தவர் பாலு மகேந்திரா. மேலும் தமிழ் சினிமா உலகில் ஒரு டிரெண்ட் செட்டராகவும் திகழ்ந்தவர். குறிப்பாக இவரது திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பவர்களின் மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும். பாலு மகேந்திரா மிகச் சிறந்த இயக்குனர் என்றாலும் மிகவும் வித்தியாசமான ஒளிப்பதிவாளராகவும் வலம் வந்தார்.
அதே போல் பாலு மகேந்திரா கதாநாயகிகளுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. ஷோபா, ராதிகா, சில்க் ஸ்மிதா என பெரும்பாலும் மென் கறுப்பு நிற கதாநாயகிகளையே தன்னுடைய திரைப்படங்களில் நடிக்க வைப்பார். இந்த நிலையில் பாலு மகேந்திரா இறப்பதற்கு முன்பு இயக்கி நடித்த அவரது கடைசித் திரைப்படமான “தலைமுறைகள்” குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை விநோதினி.
மூட்டு வலியிலும்…
பாலு மகேந்திரா படப்பிடிப்பின்போது எந்த நடிகருக்கும் நடிப்பு சொல்லித்தரமாட்டாராம். “தலைமுறைகள்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு வயதானதால் மூட்டு வலி இருந்ததாம். அந்த மூட்டு வலியிலும் கேமராவில் தானாகவே ஷாட் வைத்துவிட்டு அதில் நடிக்கவும் செய்வாராம். அத்திரைப்படத்தில் பாலு மகேந்திரா நடிக்கவும் செய்து இயக்கி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். மேலும் அத்திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பாலுமகேந்திரா படக்குழுவில் மிகவும் குறைந்த நபர்களே இருப்பார்களாம். படப்பிடிப்பே மிகவும் சைலண்ட்டாக இருக்குமாம். மேலும் அதே போல் அந்த படப்பிடிப்பின்போது அவரது கையாலேயே சக நடிகர்களுக்கு சமைத்து தருவாராம். இவ்வாறு அந்த பேட்டியில் விநோதினி கூறியிருந்தார். நடிகை விநோதினி “தலைமுறைகள்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு சாதாரண ரசிகனை வேற லெவலுக்கு கொண்டு சென்ற புரட்சித் தலைவர்… இப்படி ஒரு நடிகரா?…