சினிமால வாய்ப்பு இல்ல… தளராத பாலுமகேந்திரா… அவர் வழி தனி வழி தான் போங்கோ!
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் பாலுமகேந்திரா. இவர் படங்களிலே நடித்த அனைத்து நடிகைகளுமே தேசிய விருது லெவலில் நடித்து புகழ்பெற்றவர். அப்படிப்பட்ட பாலுமகேந்திரா தன்னுடைய சினிமா வாய்ப்பு குறையும் போது சில விஷயங்களை பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் 80ஸ் நாயகர்களை மெறுகேற்றிய பெருமை பாலுமகேந்திராவையே சேரும். ஒரு சில படங்களை எடுத்தால் கூட அவரின் படைப்பு தனித்துவமாக அமைக்கப்பட்டு இருக்கும். அவர் தொடக்க காலத்தில் பல படங்களை தயாரித்தும் இருந்தார். அதனால் அவருக்கு கடன் பிரச்னையும் உருவாகியது. இதனால் அவருக்காக கமல் சதி லீலாவதி படத்தில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அடடே! விஜய் ஒருத்தரு தானேப்பா… எத்தனை பேரு வெயிட்டிங்கில இருக்கீங்க?
இந்நிலையில் டாக்டர் காந்தராஜ் தன்னுடைய சமீபத்தியில் பேட்டியில் பாலுமகேந்திரா குறித்து பேசி இருக்கிறார். அதில், அவர் இயக்கத்தில் வெளியான கன்னட படம் மிகவும் பேசப்பட்டது. ஆடம்பரம் இல்லாத பெரிய சீன்கள் கூட பாலுமகேந்திராவின் இயக்கத்தால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ் பட உலகில் மறக்க முடியாத படங்களை எடுத்தவர் தான் பாலுமகேந்திரா. பசி மற்றும் எச்சில் இரவுகள் படங்களில் நடித்த ஷோபா பெரிய நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். பாலுமகேந்திராவின் கேமராக்களும் செமையாக அமைந்து இருக்கும். மூன்றாம் பிறையில் பாலுமகேந்திரா இல்லாமல் இருந்தால் அந்த படம் இன்றளவும் பேசப்பட்டு இருக்கும் என்பது சந்தேகம் தான்.
இதையும் படிங்க: ரயிலிலேயே ஒரு படத்துக்கு எல்லா பாட்டையும் போட்ட இளையராஜா!.. அட அந்த படமா?!..
ஒரு கட்டத்தில் அவரின் சினிமா வாய்ப்பு குறையும் போது வாராவாரம் ஒரு குறும்படத்தினை எடுத்து நேரடியாக டிவியில் ரிலீஸ் செய்தார். பல குறும்படங்கள் இன்னும் ரசிக்க வைப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது. மூன்றாம் பிறை படத்தில் தான் ஸ்ரீதேவிக்கு நடிக்க தெரியும் என்பதையே பலர் நம்பினர்.
ஒளிப்பதிவாளரான பாலுமகேந்திராவினை இயக்குனராக மாற்றியதில் கமலுக்கே முக்கிய இடமாக இருந்தது. அவரின் நடிப்பில் அறிமுகமான எந்த நடிகைகளும் பெரிய அழகி என்று சொல்ல முடியாது. ஆனால் நடிப்பில் பின்னி விடுவார்கள். அவருக்கும் மேக்கப் போட்டு வரும் நடிகைகளையே பிடிக்காது எனக் கூறினார்.