பாலுமகேந்திராவிடம் உதவி கேட்டு வந்த இயக்குனர்!.. 'அந்த மாதிரி' படம் எடுக்க சொல்லி டார்ச்சர் செய்த சம்பவம்..

balumahendra
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முறையில் ஒளிப்பதிவு செய்து படம் எடுக்கும் முறையில் தலைசிறந்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராக ஆரம்பித்த இவரது பயணம் இயக்குனராகவும் மாற்றியது. எதையும் யதார்த்தமான முறையில் காட்சிப்படுத்த வேண்டும் என நினைப்பவர் பாலுமகேந்திரா.
இவரின் மேற்பார்வையில் நிறைய நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருந்தனர். ஒரு சமயம் இயக்குனரும் கதாசிரியருமான கலைஞானம் தான் எடுக்கப்போகும் படத்திற்காக நாயகியை தேடி பாலுமகேந்திராவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

balumahendra
பசி, முள்ளும் மலரும் படங்களின் நடித்த நடிகை ஷோபா அந்த நேரத்தில் மிகவும் பிரபலமாகியிருந்தார். மேலும் அவர் பாலுமகேந்திராவின் மேற்பார்வையில் தான் அவர் வீட்டில் தான் தன் தாயுடன் தங்கியிருந்தார். அதனால் நடிகை ஷோபாவை தன் படத்தில் நடிக்க வைக்க பாலுமகேந்திராவிடம் கேட்பதற்காக சென்றார் கலைஞானம்.
போனவர் பாலுமகேந்திராவை பார்த்து நிலவரத்தை சொல்லி அந்த படத்தை நீங்களே இயக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். பாலுமகேந்திராவும் சம்மதித்து பேசிக்கொண்டிருந்தார்களாம். ஏற்கெனவே பாலுமகேந்திரா மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி பிரபலமானவர்.

balumahendran
இதையும் படிங்க : லோகேஷ் மூலம் ரூட்டு போட்ட கமல்…நைசா நழுவிய விஜய்…கடைசியில கேமியோதான் மிச்சம்…
அதனால் மலையாளத்தில் வெளிவந்த ஒரு படத்தை தமிழில் எடுக்கலாம் என கூறி அந்த கதையை கலைஞானத்திடம் சொல்லியிருக்கிறார். கதையை கேட்டவருக்கு ஒரே ஆச்சரியம். ஏனெனில் அந்த கதை முழு செக்ஸ் படமாக அமைந்த படமாகும்.
அதனால் இதை கேட்டதும் கலைஞானத்திற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நாம் இப்பொழுது தான் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கி நல்ல இயக்குனர் என்ற பெயர் வாங்கியிருக்கிறோம் . இந்த நேரத்தில் அந்த மாதிரி படம் எடுத்தால் என் நிலைமை அவ்ளோ தான் என்று யோசித்து சொல்கிறேன் என்று கலைஞானம் வந்துவிட்டாராம்.

kalaignanam
ஆனாலும் பாலுமகேந்திரா விடாப்படியாக தொலைபேசியில் அழைக்க இதோ வருகிறேன். நான்கு நாள் கழித்து வருகிறேன் என்று சொல்லி காலப்போக்கில் பாலுமகேந்திராவின் தொலைபேசியை எடுக்ககூட மாட்டாராம். இந்த தகவலை கலைஞானமே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.