Connect with us

Cinema News

பரத் இல்லனா நான் இல்ல!.. யாரும் செய்யாததை எனக்காக அவர் செய்தார்!.. நெகிழும் சீனு ராமசாமி!..

நடிகர் பரத் மட்டும் இல்லை என்றால், நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். நடிகர் பரத் மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி இருவரும் இணைந்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில், இயக்குநர் சீனு ராமசாமி, யாருக்கும் தெரியாத பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். நடிகர் பரத் பாய்ஸ், காதல், எம் மகன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு பல படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் பல ஆண்டுகள் பட வாய்ப்பு ஏதுமின்றி இருந்தார். சமீபத்தில் தான் மீண்டும் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் பரத். இந்நிலையில் பரத் குறித்து சீனு ராமசாமி கூறுகையில், என்னுடைய முதல் படத்தின் ஹீரோ பரத். அன்றைய காலகட்டத்தில் நான் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த போது, பரத் தான் என் கதைக்கு ஓகே சொன்னார்.

bharath

அதன் பிறகு தான் நான் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களை நடித்து பல படங்களை இயக்கினேன். அதற்கெல்லாம் காரணம் பரத் கூடல் நகர் படத்திற்கு ஓகே சொன்னது தான் காரணம். அவர் மட்டும் இல்லை என்றால், நான் இன்று இல்லை என்று சீனு ராமசாமி உருக்கமாக பேசியுள்ளார். மேலும் நான் எந்த படத்திற்கு கதை எழுதினாலும், மனதில் பரத்தை வைத்து தான் எழுதுவேன்.

seenu ramasamy

அடுத்தாக தர்மதுரை போன்ற ஒரு படம் இயக்கவுள்ளேன். அதில் பரத் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மலையாளம், இந்தியில் எல்லாம் பரத் நடித்திருந்தாலும், ஒடிசா படத்தில் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமை பரத்திற்கு தான் சேரும். வேறு எந்த தமிழ் நடிகரும் ஒடியா மொழியில் நடித்ததில்லை. 20 வருடத்திற்கும் மேலாக சினிமாவில் இருக்கும் இவர், பட வாய்ப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் ஃபிட்டாக இருப்பார்.

எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு வரும் என்று சொல்வார். அப்படிபட்ட அர்ப்பணிப்பான நடிகர் பரத். கூடல்நகர் படத்தில் பார்த்ததை போலவே இன்று வரை இருக்கிறார் என்று இயக்குநர் சீனு ராமசாமி பரத் குறித்து தெரிவித்துள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top