Categories: Cinema History Cinema News latest news

பயில்வான் காலில் விழுந்த இசைஞானி இளையராஜா!… அதை செய்ய வைத்த பிரபலம்!.

Ilayaraja: தமிழ் சினிமாவின் மேதை என புகழ்ந்தாலும் அதுக்கு உரிய பெருமை கொண்டவர் தான் இளையராஜா. ஆனால் அவருக்கு தன் திறமைக்கு ஏற்ப திமிரும் அதிகமாகவே இருக்கும். அவர் பேசினாலே ஒரு வம்பை விலைக்கொடுத்து வாங்கி விடுவார். அப்படி அவர் செய்த சில சேட்டைகளை பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் பேட்டியில் இருந்து, இளையராஜாவுக்கு தன்னடகம் என்பதே இல்லை. அவர் எப்போதுமே திமிராக சுற்றி வருவார். அவர் படத்தில் இசையமைத்தால் அதில் நம்மால் குறையே சொல்ல முடியாது. அவர் போடுவது தான் பாட்டு. இதனால் அவரிடம் ஒரு ஐந்து பாட்டை வாங்கி அதனுடன் கொஞ்சம் சீனை ஷூட் செய்து படம் எடுத்து வென்ற காலம் எல்லாம் இருக்கிறது என்றார். 

இதையும் படிங்க: சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..

இளையராஜாவுக்கு ஒரு சினிமாவுக்காக 70 அடி கட் அவுட் வைத்த காலமெல்லாம் இருந்தது. 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் பாட்டு போட்டு கொடுத்து உழைத்தவர். தீபாவளி தினத்தில் 3 படம் கூட முடித்து கொடுத்து இருக்கிறார். இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் ஒப்பிட்டு பார்த்தால் இளையராஜாவை கை எடுத்து கும்பிடலாம். ரஹ்மானிடம் பாட்டு உங்க இஷ்டத்துக்கு கேட்க முடியாது.

வைரமுத்து கூட இளையராஜாவிடம் சண்டை போட்டுவிட்டே வெளியேறினார். அவர் எல்லாரிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் ஒருவரை தவிர. அது அவரின் குரு பஞ்சு அருணாச்சலம் தான். ஒருநாள் நாங்க சில பத்திரிக்கையாளர் சேர்ந்து அவர் சரஸ்வதி பூஜை பேட்டிக்காக சென்று இருந்தோம். அப்போ அவரிடம் சில சமூக கேள்வி முன் வைத்தோம். ஆனால் எனக்கு தெரியாது.

இதையும் படிங்க: ரஜினியின் பொன்விழா ஆண்டில் மகுடம் சூட்டப்போகும் லோகேஷ்! நடத்தப் போறது யார் தெரியுமா?

Published by
Akhilan