Cinema News
செட்டப்பும் கிடையாது… சின்ன வீடும் கிடையாது – பிரபல நடிகையின் சீண்டலால் – கொந்தளித்த பயில்வான்!
தமிழ் சினிமாவின் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் முதலில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை துவங்கி அதன் பின்னர் சர்ச்சை விமர்சகராக பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து வெட்டவெளிச்சமாக பேசி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இவர் தமிழில் பல நகைச்சுவை வேடங்களிலும், துணை பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பது தான் இவரது விருப்பம். அதற்காக தனது கட்டுமஸ்தான உடலை மெருகேற்றி வைத்திருப்பாராம். மேலும் அவர் மிஸ்டர் சென்னை பட்டத்தையும் வென்றார். பின்னர் இவரது உடலமை பார்த்து எம் ஜி ஆர் தான் பயில்வான் என்று அழைத்தார். பின்னாளில் அதுவே பெயராகி விட்டது. முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியர் வேடத்தில் நடித்து நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் குணசித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து வருவதாலும், குறிப்பாக பத்திரிகையாளராக இருந்து வருவதால் பழம்பெரும் நடிகைகள் முதல் தற்போதைய புது முக நடிகைகள் வரைக்கும் அனைவரது ரகசிய காதல் லீலைககளும், அரந்தரங்க விஷயங்கள் குறித்து தெரிந்திருக்கிறார். இதனால் யூடியூபில் பேசி வருவதால் லட்சணக்கில் பார்வையாளர்கள் ரசித்து பார்க்கிறார்கள்.
இதுவரை ஏகப்பட்ட யூடுயூப் சேனல்கள் [பேட்டி எடுத்து அதற்காக ஒரு நல்ல தொகையையும் அவருக்கு வழங்கி வருகிறார்கள். இப்படியான நேரத்தில் தான் ஒரு பிரபல குணசித்ர நடிகை தனது இந்த பத்திரிகை தொழிலை மோசமாக விமர்சித்திருப்பதை அறிந்து கடுங்கோபமாகிய பயில்வான் ” நான் என்ன உங்கள மாதிரி பொழப்பா பிழைக்கிறேன்? எனக்கு காதலியும் கிடையாது, செட்டப்பும் கிடையாது… சின்ன வீடும் கிடையாது என கட்டாக பதில் அளித்துள்ளார்.