சூர்யாவுக்கு சூனியம் வச்சிட்டாங்களா!.. அதுவும் அந்த நடிகர்களா?.. என்னென்ன சொல்றாரு பாருங்க..

bayilvan
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து சினிமா விமர்சகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்த திரைப்படம் கங்குவா. படம் வெளியானது முதலே தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த காரணத்தால் படுதோல்வியை சந்தித்தது. சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா.
இதையும் படிங்க: அந்த படத்தின் இரண்டாம் பாகமா? இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா
இப்படத்தின் தோல்வி நடிகர் சூர்யாவை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றார் நடிகர் சூர்யா. இந்நிலையில் அவர் தனது மனைவியுடன் கோவில் கோயிலாக சுற்றி வருவது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'கடந்த மூன்று வருடமாக சூர்யா நடிப்பில் வெளிவந்த எந்த திரைப்படமும் அந்த அளவுக்கு வெற்றி படமாக அமையவில்லை. எதற்கும் துணிந்தவன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு மிகவும் மெனக்கெட்டு, கடும் உழைப்புக்கு பின் வெளியான திரைப்படம் தான் கங்குவா.
இந்த படத்தை சிறுத்தை சிவா மிக மோசமாக எடுத்திருந்த காரணத்தால் படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. படத்தின் பட்ஜெட் 400 கோடி என ஞானவேல் ராஜா கூறி இருந்த நிலையில் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சூர்யாவின் நிலைமையும் மோசமானதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஏழரை சனி தொடங்கிவிட்டது என்று கூறி வருகிறார்கள்.

jyothika
மேலும் அவருக்கு யாராவது செய்வினை வைத்துவிட்டார்களா? அல்லது தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியது போல சினிமாவில் அவர் வளர கூடாது என்பதற்காக இரண்டு முக்கிய நடிகர்கள் சதி செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து சண்டியாகத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா உடன் சேர்ந்து நரசிம்ம கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருந்தார்.
அதன் பிறகு கணவன் மனைவியாக இருவரும் கர்நாடகாவில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். மூகாம்பிகை அம்மன் கோவிலின் சிறப்பே இழந்ததை மீட்டுக் கொடுப்பதுதான் தான். சூர்யா இழந்த புகழையும் பெயரையும் திரும்ப பெற வேண்டும் என்பதற்காக அந்த கோயிலுக்கு சென்று தம்பதிகளாக வழிபாடு செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ரஜினியின் பிறந்தநாளுக்கு 2 இல்ல!.. மொத்தம் 3 ட்ரீட்.. நடந்தா நல்லாதான் இருக்கும்?…
அதை தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு ஜோதிகா தனியாக சென்று இருந்தார். தனது கணவனை அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் சென்னை வந்து மாமனார் மாமியாரை சந்திக்க வேண்டுமே என்பதற்காக தனியாக சென்று இருக்கின்றார் . பிறப்பால் ஜோதிகா ஒரு முஸ்லிம். திருப்பதியில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் போது ஜோதிகா மட்டும் எப்படி சாமி தரிசனம் செய்தார் என தெரியவில்லை.
ஒருவேளை ஜோதிகா இந்து மதத்திற்கு விட்டாரா ? என்பது புரியவில்லை. விரைவில் இருவரும் சேர்ந்து சண்டியாகம் செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். அதனை சென்னையில் செய்யப் போகிறார்களா? அல்லது மும்பையில் செய்யப் போகிறார்களா? என்பது தெரியவில்லை. கடுமையான பிரார்த்தனைகளை செய்து வரும் இருவருக்கும் கடவுள் நல்லதை செய்தால் சரி' என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.