சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் இயக்குநர் நெல்சன் டார்க் காமெடியில் பின்னி எடுத்துள்ளதாகவும் இதுவரை பார்க்காத ஒரு ரஜினிகாந்தை இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்கப் போவதாகவும் பயில்வான் ரங்கநாதன் ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற போகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 10ம் தேதி படம் உலகம் முழுவதும் திரையரங்குகளை தெறிக்க விட காத்திருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம்:
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் படக்குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதோடு மட்டுமல்லாமல் படம் எல்லோரும் பார்த்து, சிரித்து, கொண்டாடும் படமாக வந்திருக்கிறது என பாராட்டி உள்ளனர் என பயில்வான் ரங்கநாதன் தனது லேட்டஸ்ட் வீடியோவில் பேசி உள்ளார்.
அந்த வீடியோவில் இதுவரை ரஜினிகாந்தை எத்தனையோ படங்களில் எத்தனையோ விதமான கெட்டப்புகளில் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், இந்த ஜெயிலர் படத்தில் புதிய ரஜினிகாந்தை ரசிகர்கள் நிச்சயம் பார்ப்பார்கள். அதற்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் எனக் கூறியுள்ளார்.
பயங்கரமான டார்க் காமெடி:
இயக்குநர் நெல்சனின் பெரிய பலமே பயங்கரமான டார்க் காமெடி தான். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற டார்க் காமெடிக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரித்து அந்த இரண்டு படங்களும் ஹிட் அடித்தன.
ஆனால், விஜய்யின் பீஸ்ட் படத்தில் டார்க் காமெடியை குறைத்து விட்டு ஆக்ஷனில் அதிகம் கவனம் செலுத்தியதால் சொதப்பியது. இந்நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் முழு சுதந்திரத்தையும் கொடுத்து டார்க் காமெடியை பண்ண சொன்னதன் விளைவு ஜெயிலர் படம் வெளியானால் தியேட்டரில் வசூல் மழை பிச்சிக்கிட்டு போகும் என்றும் மற்ற எந்த படங்களும் அதன் வசூல் அருகே கூட வரமுடியாது என பயில்வான் ரங்கநாதன் அதிரடியாக பேசியுள்ளார்.
விஜய் ரசிகர்களுக்குத்தான் பதிலடி:
ஹுகும் மற்றும் ஜுஜுபி பாடல்கள் மூலமாக விஜய் ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்குத்தான் ரஜினிகாந்த் பதிலடி கொடுத்துள்ளார் என்றும் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என சினிமாவில் உள்ள அத்தனை இளம் நடிகர்களுக்கும் ரஜினி என்றுமே தலைவர் தான்.
விஜய் ரசிகர்களின் அலப்பறை சமூக வலைதளங்களில் அதிகம் இருந்த நிலையில், அதனை அடக்கி வைக்கத்தான் சிங்கம் கர்ஜித்துள்ளது என பயில்வான் ரங்கநாதன் ரஜினியின் எச்சரிக்கை ஏன் என்பது குறித்தும் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…