தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்பது எப்படி சரியாக இருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கின்றார்.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது கங்குவா திரைப்படம். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றது. படம் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெறும். இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு படத்தின் தரம் இருக்கும் என்றெல்லாம் படக்குழுவினர் பில்டப் கொடுத்து வந்தனர்.
இதையும் படிங்க: இது நடக்கும் என நினைத்தேன்… கனத்த இதயத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு… எப்படி இருந்த மனுஷர்?
ஆனால் படத்தின் கதை ஸ்ட்ராங்காக இல்லை, சுவாரஸ்யமாக இல்லை பல இடங்களில் இரைச்சல் அதிகமாக இருக்கின்றது என்கின்ற எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த காரணத்தால் திரையரங்குகளில் இந்த திரைப்படம் தற்போது காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது. இது படக்குழுவினருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கின்றது.
இந்நிலையில் இந்த நஷ்டத்தை நடிகர் சூர்யா ஈடு செய்வாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு சினிமா விமர்சகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பதில் அளித்து இருக்கின்றார். அதில் அவர் கூறியிருந்ததாவது ‘கங்குவா படத்தின் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குனர் சிறுத்தை சிவா தான். கதையில் கோட்டை விட்டுவிட்டார். இது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம்.
மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் சூர்யா குடும்பத்தினரும் மிக நெருக்கமாக இருக்கும் பட்சத்தில் ஞானவேல் ராஜாவுக்கு சூர்யா உதவி செய்வாரே தவிர படத்தின் தோல்விக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படம் லாபமாக இருந்தாலும் படம் நஷ்டமாக இருந்தாலும் அதை ஞானவேல் ராஜா தான் பார்த்துக் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் இந்த திரைப்படத்தால் நடிகர் சூர்யாவுக்கு தான் மிகப்பெரிய நஷ்டம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படத்தில் நடித்து மற்ற படங்களை எல்லாம் கோட்டை விட்டுவிட்டார். சிறுத்தை சிவாவை நம்பி இறங்கியதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நடிகர் சூர்யாவும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: ஆவணப்படம்னா உண்மையைச் சொல்லணும்… கோயம்பேடு ஆம்னி பஸ் மறந்துடுச்சா நயன்தாரா?
இதில் அரைநாள் காட்சி மட்டும் தான் முதல் பாகத்தில் வந்துள்ளது. இதனால் இரண்டாவது பாகம் முதல் பாகத்தை காட்டிலும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். முதல் முறையாக அண்ணன் தம்பி இருவரும் எதிர் எதிர் கதாபாத்திரங்களில் நடிக்கும் போது நிச்சியம் அது வொர்க் அவுட்டாகி இருக்கும். இதனால் இரண்டாவது பாகத்தில் தயாரிப்பாளர் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
தளபதி விஜய்…
Sivakarthikeyan: விஜய்…
Sun serials:…
Thalapathy 69: எச்.வினோத்…
பிரபல தயாரிப்பாளரும்…