“நக்சலைட் ஆதரவாளர்!! எம்.ஜி.ஆர் வெறுப்பாளர்??”… புரட்சி இயக்குனர் மணிவண்ணனின் யாரும் அறியாத பக்கங்கள்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பிரபல இயக்குனராகவும் திகழ்ந்து வந்தவர் மணிவண்ணன். தீவிர பகுத்தறிவுவாதியாக திகழ்ந்த மணிவண்ணன், சமூக நீதி கருத்துக்கள் பலவற்றை தனது திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்தியவர்.
அமைதிப் படை
குறிப்பாக மணிவண்ணன் இயக்கிய “அமைதிப்படை” திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படமாக அமைந்தது. மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் நையாண்டி திரைப்படமாக “அமைதிப் படை” திகழ்ந்தது. அதுமட்டுமல்லாது “நூறாவது நாள்”, “இருபத்தி நான்கு மணி நேரம்”, “கோபுரங்கள் சாய்வதில்லை”, “ஜல்லிக்கட்டு”, போன்ற முக்கிய வெற்றித் திரைப்படங்களையும் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.
நக்சலைட் ஆதரவு
மணிவண்ணன் ஒரு பெரியாரிய சிந்தனையாளர் என்பதை பலரும் அறிவர். ஆனால் அவர் ஒரு நக்சலைட் ஆதரவாளர் என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம்!
இது குறித்து பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், நக்சலைட் இயக்கத்தின் தலைவரான சாரு முஜிம்தாருடன் மணிவண்ணன் சில நாட்கள் பயணித்தார் எனவும், முதலாளி வர்க்கத்தின் மேல் உள்ள கோபத்தால் அவர் நக்சலைட்டுக்கு ஆதரவாக இருந்ததாக தன்னிடம் கூறியதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர் மீதான வெறுப்பு
மணிவண்ணனுக்கு எம்.ஜி.ஆர் மீது வெறுப்பு இருந்ததாக அப்பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். இது குறித்து அவர் “இந்த தமிழ்நாட்டு மக்களை முட்டாள் ஆக்கியதே எம்.ஜி.ஆர்தான் என அடிக்கடி மணிவண்ணன் திட்டுவார்” என்று கூறியிருந்தார்.
முற்போக்குச் சிந்தனை
1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அலைகள் ஓய்வதில்லை’. இத்திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியவர் மணிவண்ணன்.
இதையும் படிங்க: “விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் நடந்த பிரச்சனை இதுதான்”… உண்மையை உடைத்த மூத்த நடிகர்…
இதில் கார்த்திக் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராகவும், ராதா கிருஸ்துவராகவும் நடித்திருந்தார்கள். இருவருக்கும் ஒரு கட்டத்தில் காதல் மலர, இரு வேறு மதங்களின் காரணமாக இருவரின் காதலுக்கும் பல எதிர்ப்புகள் வரும். இதனால் தங்களுக்கு மதமே வேண்டாம் என்று நினைக்கும் காதல் ஜோடி, தங்களது மத அடையாளத்தை துறந்து விடுவார்கள். அதாவது கார்த்திக் தனது பூநூலையும், ராதா தனது சிலுவையையும் அறுத்துக்கொள்வார்கள்.
இது குறித்து அப்பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன் “ இத்திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தாலும் இந்த சிந்தனை மணிவண்ணனின் மூளையில் உதித்த சிந்தனை ஆகும்” என கூறியிருந்தார்.
கமலை தாக்கிப் பேசிய மணிவண்ணன்
கமல்ஹாசனுடன் இணைந்து சில திரைப்படங்களில் மணிவண்ணன் நடித்திருந்தாலும் கமலுடன் நிறைய கருத்து வேறுபாடு அவருக்கு இருந்தது. ஒரு முறை ஒரு பொது மேடையில் கமல்ஹாசனை மிக கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது குறித்து அப்பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன் “கமல்ஹாசன் பிறந்த சமூகத்தின் மீது மணிவண்ணனுக்கு கோபம் இருந்தது. உயர்சாதி என்று கூறப்படுகிற அந்த சமூகத்தால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற கொள்கை ரீதியான கோபம்தானே தவிர, அது தனிப்பட்ட கோபம் அல்ல” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.