சரத்குமார் இத்தனை நடிகைகளை காதலித்தாரா? லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!!
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என்று பெயர் பெற்ற சரத்குமார், 1974 ஆம் ஆண்டு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி என்ற டைட்டிலை வென்றார். அதன் பின் பத்திரிக்கைத்துறையில் பணியாற்றத் தொடங்கிய சரத்குமார், தனது நண்பர் ஒருவரின் தயாரிப்பில் உருவான “சமஜம்லோ ஸ்திரீ” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழில் “கண் சிமிட்டும் நேரம்” என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார். அதன் பின் தமிழில் ‘புலன் விசாரணை”, “மௌனம் சம்மதம்”, “புரியாத புதிர்” போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். அதே போல் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் சரத்குமார்.
தமிழின் டாப் கதாநாயகிகள் பலருடனும் நடித்த சரத்குமார், தனது கட்டுமஸ்தான உடலின் மூலம் அன்றைய இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்து வந்தார். அன்று மட்டுமல்லாது இன்றும் தனது உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்கும் சரத்குமார், இன்றைய இளம்பெண்களையும் கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் சரத்குமார் பல நடிகைகளை காதலித்து வந்ததாக ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் நடிகை தேவயானியை திருமணம் செய்துகொள்வதாக மிகவும் பிடிவாதமாக இருந்தாராம் சரத்குமார். ஆனால் அப்போது ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சரத்குமாருக்கு திருமணம் ஆகியிருந்ததாம். எனினும் தேவயானியை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் தேவயானியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டாராம். ஆனால் சரத்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற காரணத்தினால் அவருக்கு பெண் கொடுக்க தேவயானியின் பெற்றோர் மறுத்துவிட்டனராம்.
அதன் பின் நடிகை ஹீராவை துரத்தி துரத்தி காதலித்தாராம். ஆனால் ஹீரா சரத்குமாரை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிவிட்டராம்.
ஹீராவை தொடர்ந்து நடிகை நக்மாவின் மேல் பயங்கர காதலாக இருந்தாராம் சரத்குமார். மேலும் நக்மாவிற்கு சொந்தமாக ஒரு வீட்டையே வாங்கிக்கொடுத்தாராம் சரத்குமார். ஆனால் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்துவிட்டனராம். அதன் பிறகுதான் ராதிகாவை திருமணம் செய்துகொண்டாராம் சரத்குமார்.