நடன இயக்குனருடன் திருமணம் செய்துகொள்ளாமலே இணைந்து வாழ்ந்த சிம்ரன்… மார்க்கெட் போனதுதான் மிச்சம்..

by Arun Prasad |   ( Updated:2022-12-25 02:31:17  )
Simran
X

Simran

80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த சிம்ரன், தனது கொடி இடையை காட்டி இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர். மிகவும் சிறப்பாக நடனமாடக்கூடிய சிம்ரன், தனது கியூட்டான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார்.

Simran

Simran

சிம்ரன் தமிழில் “விஐபி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “ஓன்ஸ் மோர்”, “நேருக்கு நேர்”, “அவள் வருவாளா” போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்த சிம்ரன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

குறிப்பாக சிம்ரனின் நடனம் பலரையும் சொக்கவைத்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இளமை துள்ளலோடு நடனமாடக்கூடியவராக ரசிகர்களை கவர்ந்திழுத்தார் சிம்ரன். இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சிம்ரன் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Raju Sundaram and Simran

Raju Sundaram and Simran

சிம்ரன் மார்க்கெட்டை இழப்பதற்கு காரணமாக இருந்தவர் நடன இயக்குனர் ராஜூ சுந்தரம்தானாம். ராஜூ சுந்தரமும் சிம்ரனும் மிக நெருங்கி காதலித்து வந்தார்களாம். இருவரும் திருமணம் ஆகமலேயே லிவிங்க் டுகதரில் கூட இருந்தனராம்.

ஒரு கட்டத்தில் சிம்ரன் ராஜூ சுந்தரத்திடம் திருமணம் செய்துகொள்வோம் என கூறினாராம். அதை கேட்டவுடன் ராஜூ சுந்தரம் ஷாக் ஆகிவிட்டாராம். திருமணம் எல்லாம் நமக்குள் செட் ஆகாது என கூறிவிட்டாராம். இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்துவிட்டார்களாம். அதன் பின் சிம்ரனை குறித்த கிசுகிசுக்கள் சினிமா உலகில் பரவி வந்த நிலையில் தனது மார்க்கெட்டையும் இழந்து விட்டாரம். இதனை தொடர்ந்துதான் சிம்ரன் ஒரு மும்பைக்காரரை அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டாராம்.

Next Story