
Cinema News
நடிகைகள் பற்றி அவதூறாக பேசவில்லை அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு.. பயில்வான் ரங்கநாதன் பாய்ச்சல்!
தயாரிப்பாளர் கே ராஜன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் இடையே பலத்த மோதல் ஏற்பட்டு வருகிறது.
சினிமா நிகழ்ச்சி ஒன்றில் “பன்னி” என பயில்வான் ரங்கநாதனை பச்சையாகத் திட்டிவிட்டார் கே. ராஜன். அதன் பிறகு எழுந்த சர்ச்சை இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை பற்றி ஒருவர் போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு சென்று விட்டது.
யூடியூபில் நடிகைகள் படுக்கைக்கு செல்வது குறித்தெல்லாம் பேசி பரபரப்பை கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் பெண்களை இழிவுப்படுத்துகிறார் என கே. ராஜன் தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு எதிராக பதில் புகார் கொடுத்த பயில்வான் ரங்கநாதன் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் பேசி இருப்பது பகீரை கிளப்பி உள்ளது.
ராஜன் உண்மையிலேயே தயாரிப்பாளர் கிடையாது. அவர் எந்தவொரு படத்தையும் தயாரிக்கவில்லை. சும்மாவே நடிகர்கள் சரியில்லை, அந்த படத்துக்கு அவ்வளவு பணம் வாங்குகிறார்கள் ஏன் பேசியே பிழைப்பை ஓட்டி வருகிறார். அவர் ஒரு காலி டப்பா என டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.
மேலும், நடிகைகள் பற்றி தான் எந்தவொரு பொய்யான தகவலையும் சொல்லவில்லை. உண்மையில் என்ன நடந்ததோ அதைத்தான் சொன்னேன். ஆதாரம் இல்லாமல் எதையும் பேசவில்லை என பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது சினிமா உலகில் பெரும் சலசலப்பை கிளப்பி உள்ளது.
மேலும், அருவா எடுத்து வெட்டுவேன் என ராஜனை நான் சொன்னேன் தான். அதை நான் மறுக்கவில்லை. உன்னை எல்லோரும் சேர்ந்து அடிக்க வராங்க, என்ன பண்ணுவன்னு கேட்டா.. நான் என்ன அடிவாங்கிட்டு சும்மா இருக்க முடியுமா? தூத்துக்குடிக்காரன் ஒரு கை பார்த்து விடுவேன்னு சொன்னேன் என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையே நடந்து வரும் இந்த சண்டையில் எப்போது தான் முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சமீபத்தில் பேசிய நடிகர் விமல் கூட பயில்வான் ரங்கநாதன் மற்றும் கே. ராஜன் இருவரும் அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.