ஆர்த்தி-ஜெயம் ரவி வாழ்க்கையில் நுழைந்த பேஸ்புக் நண்பர்...? புதுசா ஒரு குண்ட தூக்கி போட்ட பயில்வான்...!

by ramya suresh |   ( Updated:2024-09-13 13:38:40  )
ஆர்த்தி-ஜெயம் ரவி வாழ்க்கையில் நுழைந்த பேஸ்புக் நண்பர்...? புதுசா ஒரு குண்ட தூக்கி போட்ட பயில்வான்...!
X

#image_title

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்துக்கு ஆர்த்தியின் பேஸ்புக் நண்பர் தான் காரணம் என்று புதிய புரளியை கிளப்பி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தினால் அன்று முதல் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து அடுத்த படங்களில் வெற்றியை குவித்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக மாறினார்.

இவர் 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாக சில தகவல்கள் வெளியாகி வந்தது.

அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் ஜெயம் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து முடிவை அறிவித்தார். அதில் பல்வேறு யோசனைகளுக்கு பின்பு இந்த முடிவு எடுத்திருக்கின்றேன். தன்னைச் சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது. இந்த நேரத்தில் என்னுடைய தனியுரிமைக்கும் எனது நெருக்கமானவர்களின் தனியுரிமைக்கும் மதிப்பளிக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன். இந்த முடிவு எனது சொந்த முடிவு என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து 2 நாட்களுக்குப் பிறகு அவரின் மனைவி ஆர்த்தி விவாகரத்து முடிவு குறித்து மௌனம் கலைத்து அறிக்கை வெளியிட்டார். அதில் இந்த விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் தன்னிச்சையான முடிவு. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த அறிவிப்பு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோ ஒன்றில் இவர்களின் விவாகரத்து தொடர்பான காரணம் குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "சமீபத்தில் ஆர்த்தியின் அம்மாவிடம் பேசினேன். அவர் அவளுக்கும் ஜெயம் ரவிக்கும் சண்டை வருவது வழக்கம் தான். பின்னர் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆனால் இந்த முறை என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நான் கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவியுடன் பேச முயற்சி செய்கின்றேன். ஆனால் அவர் மும்பைக்கு சென்று தனியாக தங்கி இருக்கின்றார். அவரை நெருங்க முடியவில்லை" என்று ஆர்த்தியின் அம்மா கூறியதாக தெரிவித்தார் பயில்வான். இதையடுத்து பேசிய அவர் 'ஆர்த்தி மிக அழகானவர், நிறைய இயக்குனர்கள் அவரை நடிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் ஆர்த்தி நடிக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார்.

ஜெயம் ரவி அடிக்கடி அவரை சந்தேகப்பட்டு வந்தார். அதேபோல ஆர்த்தியும் ஒரு நடிகர் ஒருவருடன் பேஸ்புக்கில் பேசிக் கொண்டிருந்தார். இது ரவிக்கு தெரிய வந்ததால் இருவருக்கும் இடையே மிகப்பெரிய சண்டை வந்தது. பின்னர் ஆர்த்தி ஜெயம் ரவியிடம் பேசி அதை சரி செய்து விடலாம் என்று நினைத்து இருக்கின்றார். ஆனால் ஜெயம் ரவி அதற்கு முன்பாகவே இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்' என்று அந்த பேட்டியில் பேசியிருக்கின்றார்.

Next Story