டைவர்ஸ் அவங்களுக்கு பரம்பரை வியாதி!.. விவாகரத்துக்கு முக்கிய காரணமே இதுதான்!.. பயில்வான் பளீர்!..

Published on: November 21, 2024
bayilvan
---Advertisement---

ஏ.ஆர் ரகுமான் வீட்டில் டைவர்ஸ் என்பது பரம்பரை நோய் என்று பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறி இருக்கின்றார்.

இந்திய சினிமாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றார். இதில் கதீஜாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க: கங்குவா நெகட்டிவ் விமர்சனத்தால் விஜயை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… வெளுக்கும் ரசிகர்கள்…

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானை பொறுத்தவரையில், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருப்பவர். ஆனால் அவரின் மனைவி சாய்ரா திடீரென்று அவரது வக்கீல் மூலமாக விவாகரத்து அறிவித்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும் என்பது பலரின் கேள்வியாக இருந்து வருகின்றது.

ஏ.ஆர் ரகுமான் மனைவி சாய்ரா வெளியிட்டு இருந்த அறிக்கையில் கடினமான சூழலில் இந்த முடிவை இருக்கின்றேன். நான் எனது கணவர் ஏ ஆர் ரஹ்மானை விட்டு பிரிகின்றேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் ஏ.ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண வாழ்க்கையில் 30 வருடங்களை எட்டுவோம் என்று நம்பி இருந்தோம். இப்போது பிரிகிறோம்.

sayira
sayira

உடைந்த இதயங்களின் கனத்தை கண்டால் கடவுள் சிம்மாசனமும் நடுங்க பெறும் என்று கூறி இருந்தார். இந்த செய்தி அவரின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இத்தனை வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து விட்டு ஏன் பிரிய வேண்டும். கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்திருக்கலாமே என்பது பலரின் கருத்தாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் விவாகரத்து தொடர்பாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது ‘ஏ ஆர் ரகுமான் காதல் திருமணம் செய்து கொண்டார். எப்போதும் எந்த சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காத ஒரு மனிதர். அவருடைய விவாகரத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ரஹ்மானுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு என்பதெல்லாம் பொய்.

அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. இதில் தனுஷை இருப்பது தேவையில்லாத வேலை. முக்கியமாக ஏ ஆர் ரகுமான் வீட்டுக்கு விவாகரத்து என்பது ஒரு பரம்பரை வியாதி. முதலில் அவரது சகோதரி பத்திரிகையாளரை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் ஜீவி பிரகாஷ் சைந்தவியை காதலித்து ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து விட்டு விவாகரத்து பெற்றார்.

இதையும் படிங்க: நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா!… வரும் நவம்பர் 27 தீர்ப்பு?!… என்ன ஆக போதோ?…

தற்போது ஏ ஆர் ரகுமான் விவாகரத்து பெற்று இருக்கின்றார். இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பது அவர்களின் குடும்பத்துடைய ஆசையாக இருக்கின்றது. மேலும் இந்த விவாகரத்துக்கு காரணமே ஏ ஆர் ரகுமான் ஒரு வருடமாக வீட்டிற்கு வரவில்லை என்பதால் தான் மிகப்பெரிய பிரச்சினையாகி அவரது மனைவி விவாகரத்து முடிவுக்கு சென்று இருக்கின்றார்’ என்று அவர் அந்த பேட்டியில் கூறி இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.