சாபம் கொடுக்குறீங்களே நீங்க என்ன கண்ணகியா?.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டு.. நயனை விளாசிய பிரபலம்!..

Published on: November 18, 2024
---Advertisement---

தனுசுக்கு நடிகை நயன்தாரா சாபம் கொடுக்கிறாரே அவர் என்ன கண்ணகியா? என்று பயில்வான் ரங்கநாதன் கேட்டிருக்கின்றார்.

கடந்த 2 நாட்களாகவே சமூக வலைதள பக்கங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது நடிகை நயன்தாரா குறித்து தான். நேற்று முன்தினம் தனுசுக்கு எதிராக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியான இந்த அறிக்கை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இதையும் படிங்க: நீங்க பண்றது சரியில்ல?!… ஜோதிகாவை தொடர்ந்து சூர்யாவுக்காக களமிறங்கிய இயக்குனர்!…

திருமணம் தொடர்பான வீடியோ ஆவணப்படமாக வெளியாகும் என்று நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படம் உருவாகி வந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இந்த வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18ஆம் தேதி இன்று இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று டிரைலர் வெளியிட்டு தெரிவித்திருந்தார்கள். அந்த ட்ரெய்லரில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் எடுக்கப்பட்ட மூன்று வினாடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதற்கு நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் 10 கோடி கேட்டதாக நேற்று முன்தினம் நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதில் நடிகர் தனுஷ் குறித்து பல விஷயங்களை காட்டமாக தெரிவித்து இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில் சிலர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் நடிகர் தனுசுக்கு ஆதரவு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் சினிமா விமர்சகர்கள் பலரும் நயன்தாராவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருந்ததாவது ‘நயன்தாராக்கு எப்போதுமே பணம் மட்டும்தான் முக்கியம். தன்னுடைய திருமணத்திற்கு எந்த பத்திரிகையாளரையும், ஊடக நண்பர்களையும் அழைக்கவில்லை. மேலும் தனது திருமண வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ்க்கு விற்று அதிலும் பணம் பார்க்க தயாரானவர்தான் நயன்தாரா.

தனுஷிடம் கேட்காமலேயே நானும் ரவுடிதான் படத்தின் பல காட்சிகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தவறுதான். அது ஒரு வினாடியாக இருந்தாலும் சரி பத்து நிமிடமாக இருந்தாலும் சரி உரிமையாளரிடம் அனுமதி கேட்க வேண்டியது அவசியம். தனுஷ் தன்னை பழிவாங்குகிறார் என்று நயன்தாரா கூறி சாபம் விடுகிறாரே? சாபம் விடுவதற்கு நீங்கள் என்ன கண்ணகியா? நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை.

வல்லவன் படத்தில் சிம்புவின் உதட்டை கடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் கூட அப்படி வந்தது கிடையாது. சிம்புவுடன் காதல் பிரேக்கப் ஆனதுக்கு பிறகு பிரபுதேவாவை காதலித்து வந்தீர்கள். அவரின் மனைவி உங்க வீட்டு வாசலில் வந்து தகராறு செய்திருந்தார். இது அப்போது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. அடுத்தவரின் கணவருக்கு ஆசைப்பட்டவர் தானே நீங்கள்.

இதையும் படிங்க: ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் என்னதான் பிரச்சனை? வீராவுக்குப் பிறகு இசை அமைக்கவே இல்லையே..!

பின்னர் பிரபுதேவாவுக்கும் கண்டிஷன் போட்டீர்கள். நான் வேண்டுமா? உங்கள் பிள்ளைகள் வேண்டுமா? என்று.. அவர் பிள்ளைகள் தான் முக்கியம் என்று உங்களை விட்டுவிட்டு சென்றுவிட்டார். தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறீர்கள். உங்களுக்கு குழந்தை பிறக்காது என்பதை தெரிந்து கொண்டு வாடகை தாயின் மூலமாக பிள்ளைகளை பெற்றுக் கொண்டீர்கள்.

நான் ஒரு youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தேன். அந்த பேட்டியை நீக்க சொல்லி கூறுகிறீர்கள். அதில் ஏதாவது தவறாக பேசியிருக்கிறேனா? என்று கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லை. அப்புறம் எப்படி அந்த வீடியோவை நீங்கள் நீக்க சொல்லலாம்’ என்று நயன்தாராவை விளாசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.