சினிமாவில் ஹீரோக்கள் மீது பாலியல் புகார்... பயில்வான் சொல்லும் பகீர் பின்னணி
பிரபல யூடியூர் பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடக்கும் பாலியல் டார்ச்சர் பற்றி தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுல என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
இப்போது பரபரப்பாகப் பேசுவது மலையாள திரை உலகிலே ஹீரோக்கள் அனைவரும் நடிகைகளையும், துணை நடிகைகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது தான். நடிகர் திலீப் பாவனாவை காரில் கடத்தி பலாத்காரம் செய்தார்.
அது தான் அடிப்படையாக அமைந்தது. அதற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 6 மாதங்கள் ஜெயில்ல இருந்தாரு. இப்போது ஜாமீனில் வந்துருக்கிறார். இன்னும் வழக்கு விசாரணை முடியவில்லை.
தொடர்ந்து விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று குரல் ஒலித்ததைத் தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. முதலில் கேரள முதல்வர் பிரணாயி விஜயன் அறிக்கையை வெளியிடாமல் இருந்தார். அதன்பிறகு நெருக்கடி காரணமாக அந்த அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து மலையாளத் திரை உலகமே பற்றி எரிந்தது.
நள்ளிரவில் படப்பிடிப்பு நடக்கும் லாட்ஜ்களில் நடிகைகளின் கதவு தட்டப்படுகிறது. கேமராமேன், டைரக்டர், புரொடியூசர் கூப்பிடுறாருன்னு ஒரே டார்ச்சர்னு ஹேமா கமிட்டி அறிக்கை கூறுகிறது. குறிப்பாக சினிமா தொழிலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை அந்த அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியது.
தொடர்ந்து நடிகர் சங்கம் பதில் அளிக்காமல் இருந்தது. இதற்கு நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் மீது கடும் கண்டனம் வரவே நிர்வாகிகள் அனைவரும் கலைந்தனர். இதுல நடிகை ரித்தா பாரி மலையாளத்துல மட்டுமல்ல. மேற்கு வங்கத்திலும் இது போல நிறைய நடக்கிறது. சினிமா தொழிலே விபச்சார விடுதி தான்னு சொல்லி இருக்கிறார்.
சின்மயி கொடுத்த புகார் குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ளது. நடிகை சங்கீதா தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் கூப்பிட்டதாகப் புகார் கொடுத்தார். ஆனால் அதை யாரும் கண்டுக்கவே இல்லை. பிக்பாஸ்லயே அந்த நடிகர் பேரைச் சொல்லாம சொன்னார். இப்படி எல்லா மொழிகள்லயும் டார்ச்சர் நடக்குது. என்னோட பார்வையில் என்ன தெரியுதுன்னா நடிகர்கள் ஈசியா சினிமாவுல இருந்துட்டு அரசியலுக்கு வர்றாங்க.
Also read: 80 கோடி டேக்ஸ் விஜய் கட்டிருக்காரு… ஆனா கமல், ரஜினி, அஜீத் எல்லாம் எங்கப்பா?
அவங்க மேல ஒரு பழியைப் போடணும்னு சிலர் சதித்திட்டம் தீட்டலாம் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. டெல்லியில் எம்பியாக கங்கனா ரனாவத் ஜெயித்துள்ளார். அவருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டுருக்காங்க. கொள்கையைப் பத்தி எல்லாம் பேசக்கூடாதுன்னு.
பாலியல் தொழில் என்பது சினிமாவில் மட்டுமல்ல. மற்ற துறைகளிலும் இருக்கிறது. அங்கு பாலியல் தொழில். இங்கு டேட்டிங். அவ்வளவு தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.