More
Categories: Cinema History Cinema News latest news

இளையராஜா மேஸ்ட்ரோ கிடையாது!. ஏ.ஆர்.ரகுமான்தான் ஆஸ்கார் நாயகன்… பயில்வான் பொளேர்

இளையராஜா ஒரு பக்கத்தைப் பார்த்தால் அவர் இசைஞானி. இன்னொரு பக்கம் யாரையுமே அவருக்குப் பிடிக்காது. அகங்காரம், திமிர் பிடித்தவர். யாரையும் மதிக்க மாட்டார். அதனால் யார் யாரெல்லாம் அவருடன் மோதினார்கள்? இளையராஜா யாரிடம் எல்லாம் மோதினார் என்று பிரபல நடிகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவர் தன்னை அறிமுகப்படுத்தியவருக்கே நன்றியுடன் இருக்கவில்லை.

Advertising
Advertising

VM-BR

ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் தான் அவர் தனது இசை அமைப்பு பணிகளைத் தொடங்கினார். அவர் 20 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தார். அவரை யாரும் முன் அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது. ஆனால் தனது திமிர், அகங்காரம் காரணமாக ஏவிஎம் உடன் மோதினார்.

அங்கிருந்து காலி செய்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்தார். அங்கு பல ஆண்டுகாலம் இசை அமைத்தார். அவரது தம்பி கங்கை அமரன் தான் அவருக்கு நகமும் சதையுமாக இருந்தாராம். அங்கும் தகராறு வரவே நாலு வருடமாக வாடகையே வாங்காமல் காலிப்பண்ணச் சொன்னார்களாம். அங்கும் தகராறு வரவே கோர்ட் உத்தரவு பெற்று காலி பண்ண வைத்தார்களாம். அப்போது இளையராஜாவுக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்களும் போராட்டம் நடத்தினார்களாம். அதன்பிறகு பிரசாத் ஸ்டூடியோ உண்மையை விளக்கிய பிறகு தான் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்களாம்.

தற்போது கோடம்பாக்கத்தில் உள்ள எம்எம் தியேட்டரில் இளையராஜா ரெக்கார்டிங் தியேட்டர் வைத்துள்ளார். ஆரம்பத்தில் பாரதிராஜாவும், இளையராஜாவும் நெருக்கமாக இருந்தனர். பாரதிராஜாவுடன் மோதினார். இதனால் அவர் இயக்கத்தில் சில படங்களுக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை. அதன்பிறகு முதல்மரியாதை ரெக்கார்டிங்கின் போது வைரமுத்துவுடன் தகராறு. அவரோ ஏஆர்.ரகுமானின் இசைக்கு பாடல் எழுத ஆரம்பித்துவிட்டார். அங்கு மார்கெட் உயர்ந்தது. இங்கு குறைந்தது. அவரை மேஸ்ட்ரோ என்றனர். ஆனால் அவர் மேஸ்ட்ரோ கிடையாது. நாமாக கொடுத்தது. ஆனால் ஆஸ்கார் விருதை அள்ளியவர் ஏ.ஆர்.ரகுமான்.

Published by
sankaran v

Recent Posts