இந்த மாதிரி படம் எடுத்தது ஒரு தப்பா? பயில்வான் கேட்ட கேள்வியால் விழிபிதுங்கி நின்ற இயக்குனர்
Bayilwan Renganathan: நடிகைகளின் அந்தர வாழ்வியலை, பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்த யாருக்கும் தெரியாத ரகசியங்கள் என வெளிச்சம் போட்டு காட்டி தனது யூடியூப் சேனலின் மூலம் சம்பாதித்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாத. இதனாலேயே பிரபலங்கள் மத்தியில் பயில்வான் ரெங்கநாதனுக்கு ஒரு நல்ல பெயர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு சில பேர் வீடியோ போட்டு பயில்வான் ரெங்கநாதனை திட்டவும் செய்திருக்கின்றனர். இருந்தாலும் தொடர்ந்து தனது வேலைகளை செய்து கொண்டுதான் வருகிறார். ஆரம்பத்தில் கவுண்டமணி நடித்த படங்களில் பயில்வான் ரெங்கநாதன் நடித்திருப்பார். பல படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: ஈஸ்வரி முகத்தில் அடித்த எழில்… கோபிக்கு ஆப்படித்த புது தொழில்.. என்னங்க இப்படி ஆச்சு?
இந்த நிலையில் ஒரு புதுமுக இயக்குனரை தனது கேள்வி கனைகளால் வெளுத்து வாங்கியிருக்கிறார்.ஆலகலம் என்ற பெயரில் வெளியாகி அந்தப் படத்தை இயக்கியிருப்பவர் புது முக இயக்குனர் நளன். குடிகார ஆண்களால் அவதிபடும் பெண்களை மைப்படுத்தி அந்தக் கதை அமைந்திருக்கும்.
இதை பற்றி கேள்வி எழுப்பிய பயில்வான் படத்தில் அவர் குடிக்கிறான். குடித்துவிட்டு விட்டு நாள்தோறும் வீட்டில் பிரச்சினை. ஒரு கட்டத்தில் அவன் இறந்தே போகிறான். பின் அவன் மனைவி யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறாள். இதில் என்ன சொல்ல வருகிறீர்கள்? இதில் எந்த கதையும் இல்லையே என பயில்வான் கேட்டார்.
இதையும் படிங்க: 27 முறை விஜயுடன் மோதிய சூர்யா படங்கள்!… முதன் முதலில் 150 கோடியை குவித்த தளபதி படம்!..
அதுமட்டுமில்லாமல் குடி மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை பாதிக்க வில்லை. காதலும்தான் என்று பயில்வான் கேட்க, அதற்கு தடுமாறி அந்த இயக்குனர் காதலில் விழுந்ததனால்தான் அவர் குடிக்கே அடிமையாகிறான். அதனால் தான் அவர் வாழ்க்கை பாழாகிறது என்று கூறினார்.
அப்போ முதலில் காதலில் விழுந்ததுதான் தவறு. இதிலிருந்தே தெரிகிறது காதல்தான் ஒருவனை அவனது வாழ்க்கையை இழக்க வைக்கிறது என அந்த இயக்குனரை பார்த்து பயில்வான் கேட்க அதற்கு அந்த இயக்குனர் விழிபிதுங்கி நிற்கிறார்.
இதையும் படிங்க: எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பப்ளிசிட்டி முக்கியம்!.. ரத்னம் படத்தின் கதை இதுதான்.. ஹரி ஓபன் டாக்!..