ராமர் எல்லாத்தையும் இருட்டலயே பண்றார்.. ஆதிபுருஷ் படத்தை பங்கம் செய்த பயில்வான் ரங்கநாதன்
நேற்று உலகம் எங்கிலும் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியானது ஆதி புரூஸ். கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் ரசிகர்களை எதிர்பார்த்த அளவு திருப்தி படுத்தவில்லை. படத்தில் பிரபாஸ் ,சையத் அலிகான் ,ப்ரீத்தி சனோன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய காவியமான இராமாயணம் கதையை தழுவி இந்த படத்தை எடுத்துள்ளனர். படத்தின் இயக்குனர் ஓம் ராட். 2020 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்திற்காக நாட்களை செலவு செய்திருக்கின்றனர்.
படம் வெளியாகி நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையே அள்ளி வருகின்றது. குறிப்பாக இயக்குனரின் டைரக்ஷன் சரியில்லை என்றும் வெளிப்படையாகவே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போல எல்லா படத்தையும் கழுவி கழுவி ஊற்றி எடுக்கும் பயில்வான் ரங்கநாதன் இந்த படத்தை மட்டும் சும்மா விடுவாரா என்ன.
ஒரு விழாவில் பேசிய பயில்வான் ரங்கநாதன் தயாரிப்பாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் குறிப்பாக மற்ற மொழி சினிமாக்களை விட தமிழ் மொழி சினிமாக்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறது என்றும் தனது ஆதங்கத்தை கூறினார். மேலும் இப்பொழுது வருகின்ற எல்லா படங்களும் ஒரே மாதிரியான கதையில் அமைந்தவையாகவே வருகின்றன என்றும் தனது கருத்தை முன் வைத்தார்.
அதில் இந்த ஆதி புருஷ் படத்தை பற்றி குறிப்பிட்டு பேசிய பயில்வான் ரங்கநாதன் ஒரு குரங்கு கூட வந்து இந்த படத்தை பார்க்க முடியாது என்று கூறினார். குரங்குகளுக்கு டிக்கெட் இலவசம் என்று சொன்னால் கூட ஒரு குரங்கு கூட வந்து படத்தை பார்க்காது என்று கூறினார். ஏனெனில் அந்த அளவிற்கு படத்தை மோசமாக எடுத்துள்ளனர் ,இந்த படத்தில் இருட்டிலேயே எல்லா வேலையும் செய்திருக்கிறார் ராமர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் படத்தில் அவர் ராமர் மாதிரியா இருக்கிறார்? ஏதோ முஸ்லீம் பாட்ஷா மாதிரி இருக்கிறார் என்று பிரபாஸை கிண்டலடித்தும் கூறினார்.
மேலும் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பற்றி தெரிந்த ஒரு நபரை கூட வைக்க முடியாத நிலைமையில் இருந்திருக்கின்றனர் இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும். அந்த அளவுக்கு படத்தில் ராமர் இருட்டிலேயே எல்லா வேலையும் பார்த்திருக்கிறார் என்று கூறினார்.
இதையும் படிங்க : மணிரத்னம் செய்த செயல்!.. நெகிழ்ந்து போய் கண்கலங்கிய பாண்டியராஜன்..