திரிஷாவை விட அவங்க அம்மா சூப்பர்..! வம்புக்கு இழுக்கும் திரைப்பிரபலம்...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் துணை நடிகையாக சினிமாவில் நடிக்க வந்தார். ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருப்பார். அதன் பின் தொடர்ச்சியாக படவாய்ப்புகள்குவிய தொடங்கியது.
கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் திரிஷா. இவரின் கெரியரில் சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா உட்பட பல படங்கள் மேலும் வெற்றியை பெற்று தந்தது. இதனிடையில் ஒரு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று அது நின்று போனது.
அதன் பின் புதுமுக நடிகைகளின் வரவால் மார்க்கெட் சரியத் தொடங்கியது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சினிமாவில் வயது அதிகமாகி இன்னும் திருமணம் ஆகாமல் நிறைய நடிகைகள் உள்ளனர். அதில் திரிஷா, வரலட்சுமி சரத்குமார் போன்றோரை உதாரணமாக கூறும் பயில்வான் ரெங்கனாதன்
ஏற்கெனவே திரிஷா இரண்டு பேரை காதலித்ததாகவும் அதுவும் பாதியிலயே நின்று போனதாகவும் கூறிய பயில்வான் ரெங்கநாதன் உண்மையிலயே திரிஷாவை விட அவங்க அம்மா அழகாக இருப்பார் என்பதையும் தெரிவித்தார். திரிஷாவை பற்றி பேசும் போது அம்மாவை பற்றி பேசியது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.