நான் ஒரு படம் எடுத்தேன்! பன்னீர் செல்வம் செஞ்ச வேலை என்னனு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக பத்திரிக்கையாளராக திரை விமர்சகராக இருப்பவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் பெரும்பாலும் நடிகைகளின் அந்தரங்க விஷயத்தில் தலையிட்டு பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார். கிசுகிசுக்கள், வதந்திகள் என எதையும் விடாமல் தன்னுடைய youtube சேனல் மூலமாக கலை ரசிக்க வைத்துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரபலங்களை மட்டுமே வம்பு இழுத்துக் கொண்ட பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அரசியல் வரை தன்னுடைய வேலையை காட்டியுள்ளார். பயில்வான் ரங்க நாதனை பற்றி அறியாத இன்னொரு பக்கமும் இருக்கின்றது.
நடிகராக, ஸ்டண்ட் மாஸ்டராக பத்திரிக்கையாளராக மட்டுமே பார்த்து வந்த பயில்வான் ரங்கநாதன் ஒரு தயாரிப்பாளர் என்று சொன்னால் யாராலும் நம்ப முடிகின்றதா. அவர் கரியரில் ஒரே ஒரு படத்தை மட்டும் தயாரித்து இருக்கிறாராம்.
1982 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த அழகிய கண்ணே என்ற திரைப்படம் தான் பயில்வான் ரங்கநாதன் தயாரித்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் அஸ்வினி, சரத் பாபு, சுகாசினி தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சாருஹாசன், செந்தாமரை போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துக் கொடுத்த படமாக இது அமைந்தது.
இந்தப் படம் தயாரிக்கும் போது அவர் கையில் பணம் இல்லையாம் அதனால் ஒரு அமைச்சரின் உதவி கொண்டு பணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது அந்த அமைச்சர் பயில்வான் ரங்கநாதன் கேட்ட பணத்தை ஓ பன்னீர் செல்வத்திடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க : வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்கனு சொன்னா கேட்டீங்களா? பார்த்திபனால் முடங்கி கிடக்கும் லைக்கா நிறுவனம்
பயில்வான் ரங்கநாதன் இடம் படத்தை கொடுத்தது பன்னீர்செல்வம் தான். அதன் பிறகு தான் அந்த படம் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை என்பதால் மீண்டும் படத்தை தயாரிக்கும் என்ற முயற்சியை கைவிட்டாராம் பயில்வான் ரங்கநாதன். இந்த செய்தியை பயில்வான் ரெங்கநாதனே ஒரு பேட்டியில் கூறினார்.