ராதாவின் மகள் திருமண வேலைகளை வரிந்து கட்டிக்கொண்டு செய்த சிரஞ்சீவி.. இதுதான் காரணமா?
நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவின் திருமணம் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தடபுடலாக நடந்தது. தன் மகளை ஏன் ஒரு நடிகருக்குக் கட்டிக் கொடுக்கவில்லை? சிரஞ்சீவி வந்து 4 நாள்களாக டேரா போட்டு பணிவிடை செய்ய என்ன காரணம் என பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். பார்க்கலாமா...
நடிகை ராதாவை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. முதல் படம் மத சம்பந்தப்பட்ட காதல். நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக் தான் கதாநாயகன். படம் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது. அலைகள் ஓய்வதில்லை என்ற இந்தப் படத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாராட்டு விழா நடத்தினார்.
ராதாவை அறிமுகப்படுத்திய பாரதிராஜா 2வது படத்தில் முதல் மரியாதையில் ஜாக்கெட் இல்லாமல் அறிமுகப்படுத்தினார். மகளையும் ஜாக்கெட் இல்லாமல் நடிக்க வைத்தார் பாரதிராஜா. ஆனால் படம் பிளாப்.
எப்பவுமே படம் ஓடலைன்னா அந்த நடிகையை சீண்ட மாட்டாங்க. அதனால கார்த்திகாவுக்கு கல்யாணம் பண்ணனும்கற முடிவுக்கு வந்தார் ராதா.
தனது கணவரோ மிகப்பெரிய கோடீஸ்வரர். 5 நட்சத்திர ஓட்டல்கள், நட்சத்திர படகுகள், மில் என பல சொத்துக்களுக்குச் சொந்தக்காரர். ஆனால் ஏன் தனது மகளை நடிகருக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை?. அது சமயத்தில் காலை வாரி விடும். திடீர்னு டைவர்ஸ் பண்ணிட்டு வேறொருவரைக் கல்யாணம் பண்ணி விடுவான் என்று நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அதனால் தான் தொழிலதிபரின் மகனுக்கு தனது மகளை ராதா திருமணம் செய்து வைத்தார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஜினி, கமலுடன் ஜோடியாக நடித்தவர் ராதா. ஆனால் அவர்கள் யாரும் திருமணத்திற்குச் செல்லவில்லை.
அதே சமயத்தில் அந்த திருமணத்திற்கு 3 நாள்களுக்கு முன்பே வந்து அத்தனை வேலைகளையும் செய்தவர் சிரஞ்சீவி. ராதா விஷயத்தில் தெலுங்கு நடிகர் பாலையாவுக்கும், சிரஞ்சீவிக்கும் மிகப்பெரிய தகராறு எல்லாம் வந்ததுண்டு. தொடர்ந்து சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடித்தவர் ராதா. அப்பா ஸ்தானத்தில் இருந்து மகளுக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்தார் சிரஞ்சீவி. காரணம் தன்னுடைய பல படங்களில் நடித்த காரணத்தால் அவருக்கு நட்பின் அடிப்படையில் இந்தப் பணிவிடைகளைச் செய்துள்ளார்.
நடிகை ராதா மகள் கார்த்திகா ரோஹித் மேனனைக் காதலித்துக் கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கழுத்து நிறைய நகைகளை அணிந்து வந்த இவரை சோஷியல் மீடியாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.