
Biggboss Tamil 7
ஆசையா இருந்த ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த பிபி டீம்… எலிமினேட்டான போட்டியாளர் இவர்தானா..?
Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனுக்கு போட்டியாளர்கள் ரொம்பவே ஆவலாக இருந்த நிலையில் கடைசியில் அல்வா கொடுத்து கடுப்பேத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் செம டோஸ் விட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட பரபரப்பை எட்டி விட்டது. கடந்த வாரம் அதிரடியாக உள்ளே நுழைந்த வைல்ட் கார்ட் போட்டியாளர்களை புல்லி செய்த பழைய போட்டியாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
இதையும் வாசிங்க:ஒரே நாளில் ரஜினியை மயக்கிய லதா… காதலை சூப்பர்ஸ்டார் யார்கிட்ட முதலில் சொன்னாரு தெரியுமா..?
அதேவேளையில் நிகழ்ச்சியில் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளும் ஆயிஷாவை தூக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை வைத்தனர். இதை வைத்து பலரும் மற்ற போட்டியாளர்களுக்கு வரிசையாக ஓட்டுக்களை போட்டு வந்தனர்.
இந்த வாரம் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் காத்து இருந்த நிலையில் இந்த வார எலிமினேஷனில் இருந்து ஆயிஷா வெற்றிகரமாக தப்பி விட்டார் என்ற தகவல்கள் கசிந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் வைல்ட் கார்டில் உள்ளே வந்த அன்னபாரதி தான் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் வாசிங்க:பீடி கேட்ட ரஜினிக்கு கிளாஸ் எடுத்த தோட்டக்காரார்!.. அதிலிருந்து சூப்பர்ஸ்டார் கத்துக்கிட்டது இதுதானாம்!…
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் முகம் சுழிக்கும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் நடந்தது. அதிலும் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட ஆயிஷா, நிக்சன் ஜல்சா தான் உச்சத்தில் கொச்சையாக இருந்ததாகவும் பேச்சுகள் எழுந்தது.
இதனால் கண்டிப்பாக அவர் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் ஒரே வாரத்தில் வைல்ட் கார்டாக வந்த அன்னபாரதியை வெளியேற்றி இருப்பது பலருக்கு அதிர்ச்சியாக இருப்பதும் கூறப்படுகிறது. வார நிகழ்ச்சியில் கமல் டோஸ் ஆச்சும் கொடுப்பாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.