ஐய்யயோ இவரா?..கொஞ்சம் ஓவரத்தான் போறாரு!..ஒட்டுமொத்த யுனிட்டையும் பந்தாடும் அரபிக்குத்து மாஸ்டர்!..
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படம் பெரும் தோல்வியை தழுவினாலும் அந்த படத்தில் அமைந்த அரபிக்குத்து பாடல் இன்று வரை ரசிகர்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அதற்கு காரணமாக இருந்தவர் அனிருத் என்றாலும் விஜய் ஆடிய ஆட்டம் அனைவரையும் ஈர்த்தது.
அந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ஜானி. ஒரு சில படங்களில் இவர் நடனம் அமைத்திருந்தாலும் இந்த அரபிக்குத்து பாடல் தான் இவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது. அதன் காரணமாகவே விஜயின் நடிப்பில் அடுத்த உருவாகி கொண்டிருக்கும் வாரிசு படத்திலும் ஜானியே டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார்.
இதையும் படிங்க : சிம்புவின் வளர்ச்சியை அன்றே கணித்த வாலி… மாஸ் ஹிட் பாடலின் சுவாரஸ்ய பின்னணி…
இந்த நிலையில் நடிகர் ஆர்யா ‘கொம்பன்’ முத்தையாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறாதாம். அதில் ஒரு பாடல் காட்சியை படமாக்கும் போது ஜானி மாஸ்டர் இருக்கிற அனைவரையும் பாடாய்படுத்திவிட்டாராம்.
ஒரு பாட்டுக்கு அட்மாஸ்பியருக்காக நினைத்த நேரத்தில் 500 கிலோ மீன், 300 கிலோ ஸ்வீட் என கிலோ கணக்கில் பொருட்களை வாங்கி வர சொல்கிறாராம். கேட்டால் இதெல்லாம் இருந்தால் தான் பாடல் காட்சிகள் நன்றாக வரும் என கூறுகிறாராம். இதனால் இன்று என்ன கேட்பார், நாளை என்ன கேட்பார் என படக்குழுவில் இருக்கும் சில பேர் அவரை பார்த்தாலே பயந்து இருக்கிறார்களாம்.