பீஸ்ட் 100வது நாள் படப்பிடிப்பு…செம ஸ்டைலாக விஜய்…ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படம்….

Published On: November 29, 2021
vijay
---Advertisement---

மாஸ்டர் படத்திற்குன் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும், மலையாள நடிகை அபர்ணா தாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு, டாக்டர் படத்தில் நடித்த ரெட்டின் கிங்ஸ்லி,சுனில் ரெட்டி உள்ளிட்ட சிலரும் இப்பத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

beast

இந்நிலையில், இப்படத்தின் 100வது நாள் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அபர்ணா தாஸ் மற்றும் ரெட்டிங் கிங்க்ஸி ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, ரெட்டிங் கிங்ஸ்லி, அபர்ணாதாஸ், இயக்குனர் நெல்சன்,சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.

beast

இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment