150 கோடிக்கே திணறும் பீஸ்ட்... மாஸ் ஹீரோக்களே மாறுங்கப்பா!...

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சங்களால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. முதல் நாளில் ரூ.36 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் அடுத்த நாளில் இருந்து குறைவான வசூலையே பெற்றது.

ஒருபக்கம் பீஸ்ட் படம் சரியில்லை என்கிற விமர்சனமும், ஒருபக்கம் கேஜிஎப்-2 படம் மாஸாக இருக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்ததால் ரசிகர்கள் கேஜிஎப்-2 ஓடும் திரையரங்குகள் பக்கம் சென்றனர். எனவே, பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டு கேஜிஎப்-2 படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பீஸ்ட் படம் வெளியாகி முதல் வாரத்தில் இப்படம் ரூ.143.72 கோடியை வசூல் செய்தது. அவ்வளவுதான். அதன் இப்படத்தின் வசூல் அதாள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. கேஜிஎப்-2 திரைப்படம் முதல் வாரத்தில் 55 கோடியை வசூல் செய்துள்ளது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், ஒரு கன்னட திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விஜய் படத்திற்கு போட்டியாக களம் இறங்கி இத்தனை கோடி வசூல் செய்துள்ளது ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வசூல் எல்லாம் பீஸ்ட் படத்திற்கு செல்ல வேண்டியது. ஆனால், அப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களினால் கேஜிஎப்2 படத்திற்கு சென்றுவிட்டதுதான் சோகம்..

இந்நிலையில், உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் இதுவரை ரூ.153.25 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது. அதாவது. முதல் வாரத்திற்கு பின் 2வது வாரம் மற்றும் 3வது வாரம் 5 நாட்கள் சேர்த்து உலக அளவில் ரூ.9.53 கோடியை மட்டுமே பீஸ்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது.இப்படத்திற்கு போட்டியாக வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடியை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story