பீஸ்ட் படத்தின் எதிரொலி...!தள்ளாடும் இணையம்.... தக்க பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்...!

விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தனர். மேலும் விடிவி கணேஷ்,யோகிபாபு, ரெடின் கிங்ஸிலி போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் டிரெய்லரின் போதே பலத்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிர்ந்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தார் விஜய்.
டிரெய்லரின் போதே இது கூர்கா-2 என கலாய்க்க ஆரம்பித்த நிலையில் படம் ரிலீஸ் ஆனதும் படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி பண்ணீட்டாரே நெல்சன்? என்று புலம்பி தள்ளிட்டனர். பீஸ்ட் படத்தை பற்றிய ஏகப்பட்ட மீம்ஸ்கள் இதுவரை பாத்திராத அளவில் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
இதுமட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களையும் சகட்டுமானக்கி மற்ற ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இது எங்கு போய் முடியபோகிறது என்று தெரியவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் ஒரு ட்விட்டை பதிவிட்டு மற்ற ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளனர். தசாவதாரம் படத்தில் ஹெலிகாப்டரிலிருந்து கமல் வைரஸை பார்த்ததை ரசிக்காதவர்கள், லிங்கா படத்தில் மேல் இருந்து பறந்து வந்து பலூனில் குதித்து ஹீரோயினை காப்பாற்றிய ரஜினியை ரசிக்காதவர்கள், விவேகம் படத்தில் தலைகீழாக தொங்கியபடி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தும் அஜித்தை பார்த்து மெய்சிலிர்க்காதவர்கள் மட்டும் விஜய் மீது கல்லெறியுங்கள் என்று கூறியுள்ளனர்.
அந்த படத்தையெல்லாம் பார்த்து ரசித்து கைத்தட்டிய நீங்கள் ஏன் இந்த அளவுக்கு இந்த படத்தின் மீது வெறுப்பை கொட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் விஜய் ஒரு பிளாக் பஸ்டர் மன்னனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.கேலியும் கிண்டல்களும் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல. இதையெல்லாம் கடந்து தானே வந்து கொண்டிருக்கிறார். இவர் மீது எறியப்பட்ட கற்களை எல்லாம் தூக்கி எறிந்து அடுத்த படத்தில் இப்ப வாங்கடா! என்று கெத்தாக வந்து நிற்பார் என்று அந்த பதிவில் கூறியுள்ளனர்.