Connect with us

Cinema News

விஜய் இந்த விஷயத்தை மாத்திதான் ஆகணும்.! – ‘பீஸ்ட்’ நெல்சன் அதிரடி பேச்சு.!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் பீஸ்ட். ட்ரைலரில் இருந்த எதிர்பார்ப்பு ஆக்ஷன் எல்லாம் படத்தில் கொஞ்சம் குறைந்த காரணத்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்ய தவறியது. ஆதலால் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம்.

இதனுடன் வெளியான கேஜிஎப் திரைப்படம் அடுத்தடுத்து நல்ல விமர்சனங்களை பெற்று, தற்போது பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படத்தை தூக்கிவிட்டு, அதற்கு பதிலாக கேஜிஎப் திரைப்படத்தை திரையிடும் நிலை வந்து விட்டது. அந்த அளவுக்கு பீஸ்ட் திரைப்படம் மோசமான ரெக்கார்டை பதிவு செய்து வருகிறது.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சனை தான் விஜய் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், இவர் அடுத்து ரஜினி படத்தை இயக்க உள்ளதால், ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் பீஸ்ட் திரைப்பட விளம்பரத்திற்காக சன் டிவியில் நெல்சன் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் விஜய் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்கப்பட்ட போது உடனே அவர் திரைப்படம் முடிந்தவுடன் விடுமுறைக்காக வெளிநாடு சென்று விடுகிறார்.

இதையும் படியுங்களேன் – ரஜினி சாரும் அதான் ஆசை பட்டார் போல.! 27 வருடம் கழித்து வெளியான உண்மை தகவல்.!

அவர் அதனை மாற்றி கொண்டு எங்களையும் உடன் கூட்டி கொண்டு ஒரு ஐந்து நாட்கள் சுற்றுலா செல்ல வேண்டும். அவர் தனியாக சுற்றுலா செல்வதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என கலகலப்பாக பதிலைக் கூறினார். மேலும், எதனை விஜய் மாற்றக்கூடாது என கேட்டதற்கு, நாம் என்ன கமெண்ட் செய்தாலும், அவர் யதார்த்தமாக அதனை ஏற்று கொள்வார். அந்த விஷயத்தை அவர் மாற்றிக் கொள்ளக்கூடாது. என தெரிவித்தார் இயக்குனர் நெல்சன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top