யாருடா கொளுத்தி போட்டது?.. பீஸ்ட் படம் பொங்கல் ரிலீஸ் இல்லையாம்...

by சிவா |
beast
X

அஜித் நடிப்பில் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ள வலிமை திரைப்படம் வினாயகர சதுர்த்தி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் என பல ரிலீஸ் தேதிகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வலிமை திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

valimai-4

அதோடு, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது, எனவே, வலிமையும், பீஸ்ட் திரைப்படமும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன என இன்று காலை முதலே செய்திகள் வெளியானது. தற்போது அதில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

valimai-5

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம்தான் முடியவுள்ளது. அதன்பின் எடிட்டிங், டப்பிங், பிண்ணனி இசை போன்ற போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளுக்கே சில மாதங்கள் ஆகும்.

மேலும், அப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் முடியவே சில மாதம் ஆகுமாம். எனவே, 2022 கோடை விடுமுறை அதாவது ஏப்ரல் 14ம் தேதிதான் பீஸ்ட் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே, பொங்கலுக்கு வெளியாகும் வலிமையோடு, பீஸ்ட் படம் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story