அதிக மொக்க வாங்கிய விஜயின் படம்!.. கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!..
தமிழ் திரையுலகில் ஒரு செல்வாக்கு மிக்க நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். விஜய் தான் மூச்சு, விஜய் தான் எங்கள் சொத்து என்று சொல்லுமளவிற்கு தன்னுள் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை அடக்கியவராக விஜய் வலம் வருகிறார். அதே சமயம் அவரின் மக்கள் இயக்கம் சார்பிலும் ஏராளமான தொண்டர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.
இன்று விஜயின் ஒரு படம் வெளியாகிறது என்றாலே தமிழகத்தில் இருக்கும் கோடான கோடி ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்கலாம். அத்தனை பேரையும் தன் ஒரே படத்தின் மூலம் ஒன்று திரட்டி விடுவார் விஜய். அந்த அளவுக்கு விஜய் மீது தீராத பாசம் வைத்த ரசிகர்களாக இருக்கின்றனர்.
இந்த வளர்ச்சி சமீபகாலமாக விஜய்க்கு ஒரு பெரும் வளர்ச்சியாக இருந்து வருகிறது. இப்படி பட்ட வளர்ச்சி சமயத்தில் விஜயின் ஒரு படம் ப்ளாப் ஆனால் ரசிகர்களிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்து பார்க்க முடிகிறது.
அப்படி பட்ட படம் தான் கடந்த வருடம் இதே நாளில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம். கடந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழக முழுவதும் ரிலீஸான படம் தான் பீஸ்ட். இதே நாளில் பீஸ்ட் படத்தோடு மோதியது கே.ஜி.எஃப் திரைப்படம். பீஸ்ட் படம் எப்பேற்பட்ட தோல்வியை சந்தித்தது என அனைவருக்கும் தெரிந்தது.
எப்பவும் போல விஜய்க்கு உண்டான ஓப்பனிங்ஸ் சரியாகத்தான் அமைந்தது. ஆனால் போக போக படத்தை கழுவி ஊற்றாதவர்களே இல்லை. விஜயை வச்சு செஞ்சுட்டார் நெல்சன் என இயக்குனரை தாளித்து விட்டார்கள் நெட்டிசன்கள். திரும்பிய பக்கமெல்லாம் பீஸ்ட் படத்தின் சீன்களை வைத்து தான் பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலானது.
சொல்லப்போனால் விஜயின் கெரியரிலேயே அவர் வளர்ந்து நின்ற இந்த நேரத்தில் அதிக மொக்கை வாங்கிய படமாக பீஸ்ட் படத்தை தான் கூறலாம். மேலும் ஒரு படத்தின் நிறைவை ஆண்டை ஒட்டி பொதுவாக ரசிகர்கள் படத்தின் புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்வார்கள்.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜும் அனிருத்தும் சேர்ந்து நடிக்க போறாங்களா!. என்னப்பா சொல்றீங்க!…
ஆனால் இன்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில் மீண்டும் பீஸ்ட் படத்தை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். அதுவும் கேஜிஎஃப் யஷ் மற்றும் விஜயை வைத்து கலாய்க்கும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.