Connect with us

காலம் போன கடைசியில் இதெல்லாம் இப்போ யாரு கேட்டா.?! சன் பிக்ச்சர்ஸ் செய்யும் வேலைய பாருங்க..,

Cinema News

காலம் போன கடைசியில் இதெல்லாம் இப்போ யாரு கேட்டா.?! சன் பிக்ச்சர்ஸ் செய்யும் வேலைய பாருங்க..,

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்ற ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழிக்கு ஏற்றவாறு ஒரு நிகழ்வு தான் தற்போது சன் பிக்ச்சர்ஸால் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அண்மையில் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் பீஸ்ட். தளபதி விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

 

டாக்டர் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நெல்சன் என்பதால் பீஸ்ட் படத்திற்க்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. அதற்கு அடுத்த நாள் வெளியாக இருந்த கே.ஜி.எப் 2 திரைப்பட ட்ரைலர் வெளியாகிய உடன், பீஸ்ட் டிரைலரும் அதிரடியாக வெளியானது.

இதனை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்ளுக்கு ஏமாற்றமே.அதே போல கே.ஜி.எப் 2வின் பிரமாண்ட வெற்றி பீஸ்ட் படத்தை வெகுவாக பாதித்தது. இதனால் முதல் 5 நாள் கழித்து பீஸ்ட் இருந்த இடம் தெரியாமல் தியேட்டர் எண்ணிக்கை சுருங்கி போய்விட்டது என்பதே உண்மை.

இப்படி விஜய் ரசிகர்களே ஏற்கனவே நொந்து போயுள்ளனர். விஜயின் அடுத்த பட அப்டேட் எப்போது வரும் அது எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என நினைத்திருக்கையில், மீண்டும் பீஸ்ட் படத்தை ப்ரோமோஷன் செய்யும் வண்ணம், சன் பிக்ச்சர்ஸ் குழு, தற்போது ஓர் விடியோவை வெளியிட்டுள்ள்ளது.

இதையும் படியுங்களேன் – தற்கொலையும் அல்ல., கொலையும் அல்ல.! சில்க் ஸ்மிதா மரணத்தின் மர்மங்கள்.,

அதில், பீஸ்ட் மால் செட் எப்படி உருவானது என பட இயக்குனர் நெல்சன், கலை இயக்குனர் கிரண் ஆகியோர் கூறும் ஒரு மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது. அதற்கு கீழே, பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  அரபிக் குத்து பாடல் வீடியோ வெளியாக வேண்டிய நேரத்தில், பீஸ்ட் OTT செய்தி வரும் நேரத்தில் இதெல்லாம் தேவைதானா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top