கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தற்போது தளபதி விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இவர் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துவருவதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது.
Also Read

எஞ்சிய படப்பிடிப்பை விரைந்து முடித்து படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இப்படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.



