Connect with us

Cinema News

விஜய் படத்த சுட்டு அதுல அவரையே நடிக்க வச்சிட்டியே நெல்சா!…இதுதான் நடந்துச்சா?.!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் புதன் கிழமை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட் . இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் டப் ஆகி வெளியாக உள்ளது.

இப்படத்தின் தமிழ் ப்ரோமஷன் நிகழ்ச்சியாக நாளை இரவு 9 மணிக்கு நடிகர் விஜய்  மற்றும் இயக்குனர் நெல்சன் பங்குபற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதே நேரத்தில் மற்ற மொழிகளுக்கான ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று, தெலுங்கு பாதிப்புக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனர் நெல்சன் , அனிருத், பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் நெல்சன் பீஸ்ட் பற்றி பல தகவல்களை கூறினார்.

இப்படம் எந்த படத்தின் பாதிப்பாக இருக்குமா என கேட்டதற்கு , அதற்கு அவர் அப்படி இருக்காது. ஆனால் விஜய் நடித்த போக்கிரி படத்தில் இருந்து சிலவற்றை பார்த்து வியந்து அதிலிருந்து இன்ஸ்பயர் ஆகி சிலவற்றை பீஸ்ட் படத்திலும் வைத்துள்ளோம் அது நீங்கள் படம் பார்த்தால் தெரியும் என ஜாலியாக கூறியிருந்தார்

இதையும் படியுங்களேன் – இதுவரை விஜயகாந்த் கூட ஸ்ரீதேவி ஏன் நடிக்கவில்லை தெரியுமா.?! வெளியான சுவாரஸ்ய தகவல்.!

ஏற்கனவே கூர்கா படத்தின் காப்பி என கூறி வந்த நெட்டிசன்கள் , நெல்சனின் இந்த பதிலால், போக்கிரி படத்தையும் பார்த்து காட்சிகள் அமைத்துள்ளாரா என பேசி வருகின்றனர். படம் வெளியானால் தான் அது எந்த படத்தில் இருந்து இன்ஸ்பயராகி எடுத்துள்ளார் என்பது.

google news
Continue Reading

More in Cinema News

To Top