நான் அரசியல்வாதி இல்ல...சோல்ஜர்.... விஜய் மாஸ் காட்டும் பீஸ்ட் டிரெய்லர் வீடியோ...

by சிவா |   ( Updated:2022-04-02 07:31:17  )
beast
X

மாஸ்டர் படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்துள்ளார்.

டாக்டர் ஹிட் படத்துக்கு பின் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்குறது. இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல், அரபிக்குத்து பாடலும் யுடியூப்பில் மாபெரும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு மாலில் தீவிரவாதிகள் புகுந்து மக்களை பிடித்து வைக்க அங்கு இருக்கும் விஜய் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் பீஸ்ட் படத்தின் கதை.

எனவே, இந்த டிரெய்லர் வீடியோவில் பரபர ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Next Story