ஓடிடி-யிலும் மொக்கை வாங்கிய பீஸ்ட்....கேஜிஎப்2-வுக்கு முன்னாடியே வருதாம்!...

by Vel Murugan |   ( Updated:2022-04-27 01:46:50  )
ஓடிடி-யிலும் மொக்கை வாங்கிய பீஸ்ட்....கேஜிஎப்2-வுக்கு முன்னாடியே வருதாம்!...
X

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதி விஜய்யின் பீஸ்ட் மற்றும் யாஷ் நடித்த KGF 2 என இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாட்கள் வெளியாகின.

இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கும் என பார்த்தால் விஜய்யின் பீஸ்ட் பின்வாங்கிவிட்டது, காரணம் படத்தை கதைக்களம் சரியில்லை என மக்களின் கருத்தாக இருக்கிறது.

நடிகர் யாஷ் நடித்த KGF 2படம் மாபெறும் வெற்றிபெற்றதை தொடர்ந்து பட வெற்றி விழாவில் படத்தில் தன்னுடன் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டி பேசி வருகிறார் நடிகர் யாஷ் .

விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 திரைப்படங்கள் 5 மொழிகளில் வெளியாகியது.தமிழகத்தில் ஓரளவிற்கு விஜய் படம் வசூல் வேட்டை நடத்தினாலும் வெளிநாட்டில் சுத்தமாக வசூலிக்கவில்லை.

இதுவரை உலகம் முழுவதும் விஜய்யின் பீஸ்ட் படம் ரூ. 880 கோடிக்கு வசூலித்து சாதனை செய்து வருகிறது. KGF 2 படம் வெளியாகி 12 நாள் முடிவில் ரூ. 930.55 கோடி வசூலித்துள்ளது.இதுவரை பீஸ்ட் தமிழ்நாடு முழுவதும் ரூ. 102 கோடியும் Kgf 2 ரூ. 70 கோடியும் வசூலித்துள்ளதாம்.

இந்நிலையில் பீஸ்ட் மற்றும் KGF 2 படங்கள் ஓடிடி யில் வெளியாக உள்ளது.விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மே மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளது ,அதை தொடர்ந்து யஷ் நடித்த KGF 2படம் மே மாதம் இறுதி வாரத்தில் வெளியாக உள்ளது.

Next Story