
Cinema News
சுட்ட தோசையையே திருப்பி சுட்ட அனிருத்… சர்ச்சையான பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்…!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளதால் படத்தின் அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன்படி நேற்று மாலை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் புரோமோ வீடியோ ஒன்று வெளியானது. நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள அந்த பாடலுக்கு அரபிக் குத்து என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பாடல் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தான் தற்போது இதன் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
காமெடி கலந்து நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் இந்த வீடியோ சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. ஆம் இந்த வீடியோவை பார்த்த பலர் அரபிக் குத்து பாடல் டான் படத்தின் தீம் ம்யூசிக் போலவே இருக்கிறது என்றும் அவர் பாட்டை அவரே காப்பியடித்து இருக்கிறார் எனவும் அனிரூத்தை விமர்சித்து வருகிறார்கள்.
அரபிக் குத்து பாடல் வரிகளை எழுதியுள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள டான் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் டான் படத்தின் தீம் ம்யூசிக் போல் இருப்பதால் அரபிக் குத்து பாட்டையும், டான் படத்தின் தீம் மியூசிக்கையும் ஒன்றாக இணைத்து நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
என்னடா எல்லாம் நல்லா போகேதே இன்னும் பிரச்சனை ஸ்டார்ட் ஆகலையேனு நினைச்சோம். அதே மாதிரி பிரச்சனை ஸ்டார்ட் ஆகிடுச்சு. தளபதினா சும்மாவா அவர் படம் எப்பவுமே சர்ச்சைல சிக்கி தான் வெளியாகும். இந்த தடவ அவரோட மியூசிக் டைரக்டர் சர்ச்சைல சிக்கிருக்காரு அவ்ளோ தான் வித்தியாசம்.