60ஸ் கிட்ஸை மிரட்டிய அந்தக்கால ஹிந்தி பேய்ப்படம் பீஸ் ஆல் பாட்

0
507

தற்போது எப்போது பார்த்தாலும் பேய்ப்படமாக வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் திகில் படங்களாக மட்டுமே வந்து கொண்டிருந்த பேய்ப்படங்கள் சில நாட்களாக காமெடி என்ற பெயரிலும் கொஞ்சம் மொக்கை போட ஆரம்பித்துள்ளது.

அந்த அளவுக்கு காமெடி என்ற பெயரில் பல பேய்களை காமெடி பீஸ்களாக்கி நமக்கு பேய் மீது இருந்த பயம் மரியாதையை தமிழ் சினிமாக்காரர்கள் போக்கி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஹாரர் படம் எடுப்பது ஒரு தனிக்கலை. பேய் இல்லாமலேயே அது போல கதை அமைத்து படம் இயக்கலாம் என பல ஹாரர் பட இயக்குனர்கள் நிரூபித்துள்ளார்கள்.

அந்தக்காலத்தில் ஹிந்தியில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்ட ஹிந்தி ஹாரர் திரைப்படம் பீஸ் ஆல் பாட் என்ற திரைப்படம் அப்படியான ஒரு படம்தான்.

கடந்த 1962 ஆங்கிலப்புத்தாண்டான ஜனவரி 1ம் தேதியன்று பீஸ் ஆல் பாட் என்ற ஹிந்தி ஹாரர் படம் வெளியானது.

இப்படத்தில் பிஸ்வஜித், வஹீதா ரஹ்மான், மதன் பூரி, அசித் சென் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை இயக்கி இருந்தவர் ப்ரென் நாக் இவர் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை அவ்வருடம் வென்றவர். இவர் ஒரு சிறந்த கலை இயக்குனரும் கூட பல படங்களில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றிவிட்டு இரண்டே இரண்டு படங்களை மட்டும் இயக்கி இருக்கிறார்.

1962ல் இவரது பீஸ் சால் பாட் திரைப்படம் பெரிய சக்சஸ் திரைப்படமாக இந்திய அளவில் பலர் விரும்பி பார்க்கும் திகில் படமாக அமைந்தது. அந்த கால சிக்ஸ்ட்டீஸ் கிட்ஸ், அதாவது நம்ம அப்பா அம்மா ரேஞ்சில் இருக்கும் பெரியவர்கள் இந்த படத்தை மறந்திருக்க மாட்டார்கள்.

சந்தாங்காட் என்ற ஒரு வட இந்திய கிராமத்தில்  தாக்கூர் என்பவர் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அதன்பிறகு, அந்த பெண் பழிவாங்கும் ஆவியாக அலைவதாக உள்ளூர் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் . அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தாக்கூரும் கொல்லப்படுகிறார்.

பின்னர் தாக்கூரின் மகனும் அதே ஆவியால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்கூர் இறந்த இருபது வருடங்களுக்குப் பிறகு, அவரது பேரன் குமார் அந்த கிராமத்திற்கு வருகிறார், அந்த ஆவி அவரையும் கொல்லும் என்று உள்ளூர் மக்களால் எச்சரிக்கப்படுகிறது, ஆனால் குமார் அதை நம்பவில்லை. ஒரு நாள்  இரவு ஆவியின் பாடும் குரலை அவர் கேட்கிறார். அடுத்த நாள் அவர் எழுந்தவுடன், ஒரு வயதான மனிதர் பற்றியும் ராதா என்ற  பெண்ணைப் பற்றியும் அறிகிறார்.

 

இரண்டாவது நாள் இரவிலும் பாட்டு கேட்கிறது ஆனால் குமார் பாடலைப் பாடும் பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படியாக செல்லும்  கதையில் இறுதியில் குமார் கொல்லப்படுவாரா என்பதுதான் கதை. ஆனால் பார்வையாளர்களின் சிந்தனைக்கு மாறாக கடைசியில் பேயாக வருவது யார் என சஸ்பென்ஸாக காட்டப்பட்டிருக்கும்.

படத்தின் கதை மற்றும் ஹாரரான பின்னணி இசையால் இப்படம் மிரட்டியது என சொல்லலாம் இசையமைத்தவர் ஹேமந்த் குமார். அது போல கதையும் ஏனோ தானோவென்ற பேய்க்கதையாக இல்லாமல் ஆழமான கதையம்சத்தோடு வந்த பேய்ப்படமாக இது அமைந்தது எனலாம்.

இந்தப்படம் கொஞ்சம் உளவியல் ரீதியான த்ரில்லர் படம் என சொல்லலாம்.

காலம் கடந்தும் அந்தக்கால பெரியவர்களால் இன்றும் இந்த திகில் படம் சிலாகித்து பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக்கால பெரியவர்கள் இப்படத்தை பார்க்க ரொம்ப தைரியம் வேண்டும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு மிரட்டிய படமிது

இந்த படம் பெரிய சக்சஸை இப்பட இயக்குனருக்கு பெற்று கொடுத்தாலும் படம் வந்த இரண்டு வருடங்களிலேயே இப்பட இயக்குனர் ப்ரென் நாக் 42 வயதிலேயே 1964ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news