என் முதல் படத்தின் ஹீரோவே விஜய் தான்!.. சிட்டிசன் பட இயக்குனர் தவறவிட்ட அந்த வாய்ப்பு!.. அஜித்திற்கு எப்படி போனது?..

ajith vijay
2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘சிட்டிசன்’ திரைப்படம். இந்த படத்தை சரவணா சுப்பையா இயக்க நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தான் சிட்டிசன் படத்தை தயாரித்தது. அஜித்தின் கெரியரிலேயே அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய படமாக சிட்டிசன் திரைப்படம் விளங்கியது.

cirizen
பல வகையான கெட்டப் - களில் வரும் அஜித் சமூகத்தில் நடக்கும் சில பிரச்சினைகளால் ஏற்படும் அவலங்களை தண்டிக்கும் பொருட்டு தன் நடிப்பின் மூலம் அழகாக காட்டியிருப்பார். இந்தப் படத்தை இயக்கிய சரவணா சுப்பையாவிற்கு இது தான் முதல் படம். ஆனால் இந்த படத்திற்கு முன் சரவணா சுப்பையா நடிகர் விஜயிடம் தான் கதை சொல்லி கிளம்பியிருக்கிறார். அது அப்படியே அஜித்திடம் மாறியிருக்கிறது.
இதையும் படிங்க : சிபி சக்ரவர்த்தியை ஓரமாக உட்காரவைத்த ரஜினி… லவ் டூடே இயக்குனருக்கு பச்சை கொடியா??… இது என்னப்பா புது டிவிஸ்ட்டா இருக்கு..
அதாவது அஜித் பல படங்களின் தோல்வியால் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின் அவருக்கு முகவரி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. முகவரிக்கு பிறகு நிக் ஆர்ட்ஸ் அஜித்தை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட இயக்குனரை தேடிக் கொண்டிருந்தார்களாம்.

ajith
இதை அறிந்த சரவணா சுப்பையா நேராக அஜித்திடம் கதை சொல்ல போயிருக்கிறார். ஆனால் அஜித் எனக்கு ஆங்கிலத்தில் முழு ஸ்கிரிப்ட் தயாரித்துக் கொடு. நான் படித்து பார்த்து பிடித்திருந்தால் சொல்கிறேன். அதுவரை என்னை தொந்தரவு செய்யவேண்டாம் என ஸ்கிரிப்டை வாங்கிக் கொண்டாராம்.
இதையும் படிங்க : அவரு கோகுலத்தில் இருக்க வேண்டிய கண்ணன்!.. கார்த்திக் ஹீரோ என்றதும் பதறிய இயக்குனர்!..
ஆனால் அதன் பின் அஜித்திடம் எந்த தகவலும் இல்லையாதலால் ஒருவரின் உதவியோடு சூப்பர் குட் பிலிம்ஸுக்கு சென்றிருக்கிறார் சரவணா சுப்பையா. அவரின் அடுத்தபடமான ஏபிசிடி படத்தின் கதையை சொல்ல சூப்பர் குட் பிலிம்ஸுக்கு பிடித்துப் போக நம்மிடம் விஜய் கால்ஷீட் இருக்கிறது. போய் விஜயை பார்த்துவிடு என்று அனுப்பியிருக்கிறார்கள்.

ajith saravana
அப்போது விஜய் குஷி படத்தில் பிஸியாக இருந்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் விஜயை பார்க்க அனுமதி வாங்கி கிளம்பி போக அஜித்திடம் இருந்து போன் வர அதன் பிறகே சிட்டிசன் படம் தயாராக ஆரம்பித்திருக்கிறதாம். இன்னொரு பக்கம் குஷி படப்பிடிப்பில் இருந்து உனக்காக விஜய் இங்கே உட்கார்ந்திருக்கிறார், நீ என்னவென்றால் வராமல் போய் விட்டியே என்று சத்தம் போட்டனராம். இதை சரவணா சுப்பையா ஒரு பேட்டியில் தெரிவித்தார்.