More
Categories: Cinema News latest news

இந்தப் படம் மட்டும் வந்திருந்தா ‘அவ்வைசண்முகி’க்கு வாய்ப்பே இருந்திருக்காது.. நல்ல வேலை பண்ணாரு கமல்

Avvaishanmugi Movie: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் முழு காமெடி திரைப்படமாக வெளியானதுதான் அவ்வை சண்முகி திரைப்படம். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க கூடவே ஜெமினி கணேசன், நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர், மணிவண்ணன் போன்ற உச்ச நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

படம் மாபெரும் அளவில் வெற்றிப்பெற்றது. இந்தப் படத்தில் பெண் வேடமிட்ட கதாபாத்திரத்தில் கமல் நடிக்க அனைவரும் பார்த்து ரசித்த படமாக இது அமைந்தது. படத்தின் கதை மட்டுமில்லாமல் அனைத்து பாடல்களும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒன்று இல்ல இரண்டு முறை ஷங்கர் கதைக்கு நோ சொன்ன டாப் நடிகர்!… மிஸ்டர் பிரம்மாண்டத்துக்கே இந்த நிலைமையா?

ஆனால் அந்த படத்திற்கு முன்பு கமல் ‘கண்டேன் சீதையை’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். இந்த படம் மலையாளத்தில் வெளியான‘அம்மையானே சத்தியம்’ என்ற படத்தின் ரிமேக். இந்தப் படத்தை பாலந்தர் மேனன் இயக்க இதை தமிழில் கண்டேன் சீதையை என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருந்தார்களாம்.

படத்தின் படப்பிடிப்பு 10 நாள்கள் நடைபெற்றதாம். அதன் பிறகு படத்தின் கதையில் கமலுக்கு உடன்பாடே இல்லையாம். அதனால் கதையை மாற்றி எடுக்கலாமா என படத்தின் தயாரிப்பாளரிடம் கமல் சொல்ல அந்த தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டாராம்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்திற்கு இப்படி ஒரு பிரச்சினையா? மக்களுக்கு சேவை செய்யனும்.. சீக்கிரம் முடிச்சு விடுங்கப்பா

அதன் பிறகே பிறந்த கதைதான் அவ்வை சண்முகி என்ற இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார். இருந்தாலும் அவ்வை சண்முகி என்ற கதை உருவானாலும் அதில் ஜெமினிக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது சிவாஜி என அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் சிவாஜியின் உடல் நிலை கருதியே இதில் ஜெமினி நடித்தால் நன்றாக இருக்கும் என சிவாஜியே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

பின்னாளில் அந்தப் படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவரும் அறிவோம். காலத்துக்கும் நிலைத்து நிற்கும் விதமாக அவ்வை சண்முகி படம் விளங்குகிறது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் த்ரிஷா விவகாரம்! எல்லாத்துக்கும் மணிரத்தினம்தான் காரணம்.. என்னய்யா சொல்றீங்க?

Published by
Rohini