Connect with us
vichi

Cinema News

வர கோபத்துக்கு பிக்பாஸ் வீட்டுக்கு போயி நல்லா கேட்பேன்!… விசித்ரா மீது காண்டான ஷகிலா….

Shakeela: விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த வாரம் முழுவதும் வீட்டிற்குள் ஒரே ஆனந்த கண்ணீரும் பாசப்பிணைப்பையும்தான் அதிகம் பார்க்க முடிந்தது. போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து உள்ளே இருப்பவர்களை ஆச்சரியப்படுத்தினார்கள்.

நேற்று விசித்ராவின் கணவர் அவர் மகன்கள் கொடுத்த சர்ப்ரைஸ்தான் இதுவரை இல்லாத சீசன்களில் இந்த சீசனில் பெரிய ஹைலைட்டாக அமைந்தது. அதுவும் பிக்பாஸ் செய்த ப்ராங் வேற லெவல் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபாஸோட அடுத்த பட ஹீரோயின்!.. தியேட்டரில் எப்படி ரசிகர்களிடம் சிக்கியிருக்காங்கன்னு பாருங்க!

இன்று கமல் எபிசோடில் என்ன பேசப்போகிறார் என்றே தெரியவில்லை. ஏனெனில் பேசுவதற்குண்டான கண்டெண்ட் எதுவும் இல்லை. மேலும் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் நடிகை ஷகீலா விசித்ராவை பற்றி கூறிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நான் போனால் விசித்ராவை நல்லா கேட்பேன் என்று கோபத்தில் பேசினார் ஷகீலா. ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா சொன்ன அந்த தெலுங்கு நடிகர் பற்றித்தான். தமிழ் பிக்பாஸை ஆந்திர மக்களோ கேரள மக்களோ பார்ப்பதில்லை. இருந்தாலும் இந்த விஷயம் லீக் ஆனதும் அவர்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?

இதையும் படிங்க: அன்னக்கி்ளி படம் ஓடவே கூடாது!.. வேண்டிக்கொண்ட நடிகை… இப்படி ஒரு பிளாஷ்பேக்கா?!..

அதனால் விசித்ராவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. இது விசித்ரா  மேல் உள்ள பொறாமை இல்லை. அவர் மீது இருக்கும் அக்கறையில் தான் கூறுகிறேன். இந்த விஷயத்தை அங்கு போய் கூற வேண்டியதே இல்லை. மேலும் நான் தெலுங்கு பிக்பாஸிற்குள் போன போது விசித்ரா  என்னிடம் தயவுசெய்து சீகரெட் பிடிக்காதே என்று சொல்லி அனுப்பினாள்.

ஆனாலும் என்னால் முடியவில்லை. சிகரெட் பிடித்தேன். அது வைரலானது. இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகத்தான் இருக்கிறோம் என்று விசித்ராவை பற்றி கூறினார்.

இதையும் படிங்க: அத்தனை கேமராக்களுக்கு முன்னாடி மனைவியை கட்டிப்புடிச்சு கொஞ்சும் ரெடின் கிங்ஸ்லி!.. கொடுத்து வச்சவரு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top