More
Categories: Cinema News latest news

ஷங்கரின் முதல் படம் ‘ஜெண்டில்மேன்’ இல்ல! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு சீக்ரெட்

Gentleman movie:இன்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தமானவர் இயக்குனர் சங்கர். எஸ் கே சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சங்கர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு பல படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

ஒரு சமயம் எஸ் கே சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறும்போது  ‘என்னிடமிருந்து உதவி இயக்குனர்களாக இருந்த அனைவரும் படம் பண்ண போகிறேன் என ஓடி விட்டார்கள். ஆனால் சங்கர் மட்டும் கிட்டத்தட்ட என்னுடன் சேர்ந்து 18 படங்கள் பணியாற்றினார். நானும் எத்தனையோ முறை நீ தனியாக போய் படம் பண்ண வேண்டியதுதானே என கேட்டிருக்கிறேன். ஆனால் என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் அவர் போகவில்லை. அதன் பிறகு ஜென்டில்மேன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்த அளவுக்கு நிறைய சினிமாவைப் பற்றி கற்றுக்கொண்டு தன்னுடைய முதல் படத்திலேயே தரமான இயக்குனர் என்ற பெயரை வாங்கியவர் சங்கர்’ என எஸ் கே சந்திரசேகர் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: நடிகரின் கெட்டப்பழக்கத்தால் படாத பாடுபட்ட ஸ்ரீதேவி!.. மனுசன் ரொம்ப டெராரா இருப்பார் போல!..

ஜென்டில்மேன் படம் தான் சங்கருக்கு முதல் படம். ஆனால் ஜென்டில்மேன் படத்திற்கு முன்பே அவர் எடுக்க வேண்டி திரைப்படம் அழகிய குயிலே. இந்த படத்தின் கதையை குஞ்சுமோனிடம் சங்கர் சொன்னபோது முதலில் ஜென்டில்மேன் படத்தை எடுத்து விடலாம். அதன் பிறகு இந்த அழகிய குயிலே படத்தை பார்ப்போம் என சொல்லிவிட்டாராம். அவர் சொன்னதைப் போல ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அந்த படத்திற்கு பிறகாவது அழகிய குயிலே திரைப்படத்தை எடுத்தார்களா என்றால் இல்லை. மீண்டும் குஞ்சுமோன் காதலன் திரைப்படத்தை முடித்து விடலாம் என்று சொல்ல காதலன் திரைப்படத்தையும் ஷங்கர் முடித்திருக்கிறார். இந்த இரு படங்களின் வெற்றியை பார்த்த ஏ எம் ரத்தினம் லஞ்சத்திற்கு எதிராக நான் உருவாக்கி வைத்திருக்கும் இந்தியன் படத்தை எடுத்து விடலாம் என சொல்லி இந்தியன் படத்தை முடித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:கியாரா அத்வானி எல்லாம் கால் தூசுக்கு வருமா!.. இந்த வயசுலயே இப்படி ஜொள்ளு விட வைக்கிறாரே ஸ்ரீதேவி!..

அதன் பிறகு ஜீன்ஸ் படம் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்க சங்கரால் அழகிய குயிலை திரைப்படத்தை எடுக்க முடியாமல் போனதாம். ஒரு சமயம் இதைப் பற்றி பிரபல எழுத்தாளர் சுஜாதாவிடம் சங்கர் கூறியிருக்கிறார். அப்போது சுஜாதா உன்னுடைய குயிலே திரைப்படத்தை எல்லாம் ஓரங்கட்டி விடு.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உன்னை மாற்றிக்கொள். இந்த வயதில் நீ பண்ண வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. முதலில் அதை பார். பிறகு நீ எப்பொழுது ஃப்ரீயாக இருக்கிறாயோ அந்த நேரத்தில் இந்த அழகிய குயிலே திரைப்படத்தை பற்றி யோசி என கூறிவிட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை இந்த அழகிய குயிலே திரைப்படத்தின் கதை அப்படியே சங்கரின் கருவூலத்தில் பத்திரமாக இருக்கிறது என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts