ரஜினி பேசி புகழ்பெற்ற பஞ்ச் வசனம்.. ஆனால் அப்பவே பேசி மாஸ் காட்டிய எம்ஜிஆர்

Published On: March 24, 2025
| Posted By : Rohini
mgr 2

பஞ்ச் வசனத்திற்கு பேர் போனவர் ரஜினிகாந்த். ஆனால் இன்று பல பேர் பஞ்ச் வசனத்தை பேச ஆரம்பித்துவிட்டனர். ஆரம்பகாலத்தில் ரஜினியின் படங்கள் என்றால் அவர் பேசும் பஞ்ச் வசனத்திற்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருப்பார்கள். ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி, சிங்கம் சிங்கிளாத்தான் வரும், ஆண்டவன் சொன்னா அருணாச்சலம் செய்வான் போன்ற பல வசனங்களை சொல்லலாம்.

அதுவும் அவருடைய ஸ்டைலும் இந்த வசனங்களை இன்னும் தூக்கி நிறுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் அவர் பேசிய பஞ்ச் வசனங்களிலேயே அனைவருடைய கவனத்தை ஈர்த்த வசனம் என்றால் அது படையப்பா படத்தில் வரும் என் வழி தனி வழி என்ற வசனம். இது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசி பழகிய வசனம்.

ஆனால் இந்த வசனத்தை ரஜினிக்கு முன்பே எம்ஜிஆர் பேசியிருப்பதுதான் ஆச்சரியமான தகவல். இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் வில்லியாக வரும் ரம்யாகிருஷ்ணனிடம் சவால் விடும் போது ரஜினி ஸ்டைலாக பேசும் என் வழி தனி வழி என்ற பஞ்ச் டயலாக் மிகவும் பிரபலம். இதே பஞ்ச் டயலாக்கை 24 ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் பேசியிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை. 1975 ஆம் ஆண்டு வெளியான நாளை நமதே படத்தில் ஒரு காட்சியில் வில்லன் நம்பியாரின் மகன் கோபத்தில் எம்ஜிஆரை தாக்கி விடுவான்.

பதிலுக்கு நான் கொடுத்துதான் பழக்கம். வாங்கி பழக்கம் இல்லை என்று கூறியபடி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிடுவார். பின்னர் தந்தையையும் மகனையும் அலட்சியமாக பார்த்தபடி என் வழியே தனி வழி என்று சொல்லிவிட்டு கிளம்புவார். இதே வசனத்தை பின்னர் ரஜினியும் பேசியது ஆச்சரியமான ஒன்றுதான்.