பட ரிலீஸுக்கு முன்பே டபுள் ஆஃபர் கொடுத்த தயாரிப்பாளர்! ‘கேப்டன் மில்லர்’ படத்தால் இயக்குனருக்கு அடிச்ச பம்பர்

Published on: August 24, 2023
arun
---Advertisement---

தனுஷ் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் தான் இயக்குகிறார். ஏற்கெனவே அருண் மாதேஸ்வரன் படம் என்றாலே கொலை, கொள்ளை , குத்து என ஒரே ரணகளமாக இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் சாணிக் காயிதம் திரைப்படம்.

அதுமட்டுமில்லாமல் ராக்கி என்ற மிரட்டலான படத்தையும் எடுத்திருந்தார் அருண் மாதேஸ்வரன். இந்த நிலையில் அருண் மாதேஸ்வரனுடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்,

அந்த அளவுக்கு அருண் மாதேஸ்வரன் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். ஏற்கெனவே தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண் மாதேஸ்வரன் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இதையும் படிங்க : சிட்டி 3.0 ஆக மாறிய கார்த்தி! கமெண்ட் கொடுக்கிறது யாருனு தெரியுமா? எதுக்கு இந்த வேண்டாத வேலை?

மேலும் கேப்டன் மில்லர் படத்தை தயாரிப்பது சத்யஜோதி பிலிம்ஸ்தானாம். அதனால் சத்யஜோதி பிலிம்ஸ் ஏற்கெனவே அருண் மாதேஸ்வரனை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறதாம்.

ஒரு வேளை கேப்டன் மில்லர் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றால் கேப்டன்  மில்லர் 2 படத்தை தயாரிக்கவும் தயாராக இருப்பதாகவும் அதுவும் அருண் மாதேஸ்வரனை வைத்தே எடுப்பதாகவும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இதையும் படிங்க : உலகநாயகனு சொல்லிட்டு உள்ளூர் நாயகன் சம்பளத்தை கூட கொடுக்கலடா – ‘இந்தியன்2’வில் பரிதாப நிலையில் கமல்

ஒரு படம் வெளியாவதற்கு  முன்பே இந்த மாதிரி ஆஃபர்களை கொடுத்து இயக்குனர்களை சிக்கலில் மாட்டி விடுகின்றனர். ஒரு வேளை கேப்டன் மில்லர் படம் வெற்றியடைந்து அதை பார்த்து ஒரு பெரிய ஹீரோ வாய்ப்பு கேட்டால் அருண் மாதேஸ்வரானால் வர முடியுமா?

சினிமாவில் பிரச்சினைகள் எழுவதற்கு முழு காரணமே இந்த மாதிரி ஒப்பந்தங்கள்தான் என கூறிவருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.