சில்க் ஸ்மிதாவிற்கு முன்னோடி பானுமதியா?.. இது என்ன புதுசா இருக்கு?.. அப்படி ஒரு சம்பவம்!..

silk banumathi
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. நடிகர் , நடிகைகளின் கால்ஷீட் கிடைக்கிறதோ இல்லையோ சில்கின் கால்ஷீட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் அவர் வீட்டின் முன் காத்துக் கிடந்த சம்பவம் எல்லாம் அரங்கேறியிருக்கிறது.

silk1
படத்தின் வினியோகஸ்தரர்களும் படத்தை வாங்குவதற்கு முன் படத்தில் சில்கின் நடனம் இருக்கிறதா? என்று தான் முதலில் கேட்பார்கள். இருந்தால் மட்டுமே படத்தை வாங்க முன்வருவார்கள். அந்த அளவுக்கு அவரின் மார்கெட் உச்சத்தை அடைந்திருந்தது.
கிட்டத்தட்ட ஒரு முன்னனி நடிகருக்கு சமமான அந்தஸ்தை பெற்று விளங்கினார் சில்க்ஸ்மிதா. அவரைப் பற்றி ஒரு செய்தி அந்தக் காலத்தில் தீயாய் பரவியது. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஒரு படப்பிடிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னாடி கால் மேல் கால் போட்டி உட்கார்ந்திருந்தார் என்று பலபேரால் விமர்சிக்கப்பட்டார் என்று பத்திரிக்கையில் செய்திகள் வெளியானது.

silk2
ஆனால் அதற்கு முன்பே நடிகை பானுமதியும் அதே மாதிரி செயலை செய்திருக்கிறார். பானுமதி எப்பேற்பட்ட நடிகை என்று அனைவரும் அறிந்த விஷயம். அவரைப் பார்த்து பல நடிகர்கள் பயந்த சம்பவங்களும் உண்டு. உரக்கமாக பேசுவதில், எதையும் கண் முன்னே பேசுவதில் பயப்பட மாட்டார் பானுமதி.
ஒரு சமயம் ‘ நல்ல தம்பி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது என்.எஸ்.கிருஷ்ணன் எதிரே அமர அவர் முன்னாடியே பானுமதி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாராம். அந்தக் காலத்தில் என்.எஸ்.கே-வுக்கு கிடைத்த மரியாதை இப்பொழுது எம்ஜிஆரை எந்த அளவுக்கு கொண்டாடுகிறோமோ அதே அளவுக்கு தான் இருந்தார் என்.எஸ்.கே.

banumathi nsk
ஆனால் அவர் முன்னாடி பானுமதி இப்படி செய்தது பலபேருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த எரிச்சலில் என்.எஸ்.கேவிடம் ‘ ஏதாவது சொல்லுங்க, கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?’ என்று சில பேர் கேட்க அதற்கு என்.எஸ்.கே ‘அந்த அம்மா உன் கால் மேலயா கால் போட்டு உட்கார்ந்திருக்கு? அதோடு கால் அதோட கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கு, போவீயா’ என்று வழக்கம் போல சொல்லி சென்றுவிட்டாராம் என்.எஸ்.கே.
இதையும் படிங்க : சர்ச்சைக்குரிய சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் அமீர்… என்ன ஆகப்போகுதோ தெரியலயே!!